பாரதீய ஜனதா கட்சியின் புதிய தலைவர் டில்லியைச் சேர்ந்தவராக இருக்கமாட்டார் என்றும் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணி தொடங்கிவிட்டது என்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறினார்.
சுஷ்மா ஸ்வரஜ், அருண் ஜெட்லி, வெங்கையா நாயுடு மற்றும் ஆனந்த் குமார் ஆகிய அந்த நால்வர் அல்லாத ஒருவர்தான் பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக இருப்பார். இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எனக்கு கூறப்பட்டுள்ளது. அப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒப்புக் கொள்ளப் பட்டுள்ளது. அந்த அடிப்படையில் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுவிட்டதாக நான் நம்புகிறேன் என்று பகவத் இந்தியா டுடே இதழுக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளார்.
பாஜகவின் தற்போதைய தலைவர் ராஜ்நாத் சிங்கின் பதவிக்காலம் டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. பாஜகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பலர் தலைவராகக் கூடும் என்று கூறப்படுகிறது.பாஜக தலைவர் டில்லிக்கு வெளியிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவாரா? 50 - 55 வயதுடையவராக இருப்பாரா என்ற கேள்விக்குப் பதில் அளித்த மோகன் பகவத், ஆம். அவர்கள் டில்லிக்கு வெளியிலிருந்து ஒருவரைத் தலைவராகத் தேர்ந்தெடுப்பார்கள் என்று கூறினார்.
source:inneram
0 கருத்துகள்: on "பாஜகவுக்கு புதிய தலைவர் டில்லியைச் சேர்ந்தவர் இல்லை: ஆர்.எஸ்.எஸ்"
கருத்துரையிடுக