24 டிச., 2009

கண்டமால் கலவரம்: 10 பேருக்கு தண்டனை

ஃபூல்பானி:ஒரிஸாவில் கண்டமால் மாவட்டத்தில் கிறிஸ்தவ மக்களுக்கெதிராக சங்க்பரிவார பாசிஸ்டுகள் நடத்திய கலவரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 10 பேருக்கு அதிவேக நீதிமன்றம் 3 முதல் 5 வருடம் வரையிலான கடும் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

பேடிநாஜு கிராமத்தில் சிறுபான்மையினரின் வீடுகளை தீக்கிரையாக்கிய 5 பேருக்கு 5 வருட கடும் சிறைத் தண்டனையை அதிவேக நீதிமன்றம் அளித்தது. கீர்த்திகுடா கிராமத்தில் சிறுபான்மையினரின் வீடுகளை தீக்கிரையாக்கிய மேலும் 5 பேருக்கு 3 வருட கடும் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

கடந்த வருடம் சுவாமி லக்‌ஷ்மானந்த சரஸ்வதி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து சங்க்பரிவார பாசிஸ்டுகளால் கலவரம் ஏற்பட்டது. இந்நிகழ்வில் 38 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான வீடுகள் தாக்குதலுக்கு ஆளாகின. செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 கருத்துகள்: on "கண்டமால் கலவரம்: 10 பேருக்கு தண்டனை"

Unknown சொன்னது…

kristians west
movoist west

கருத்துரையிடுக