14 டிச., 2009

மாதம் 11 அமெரிக்க வங்கிகள் திவால் - இதுவரை 133 காலி

நியூயார்க்: அமெரிக்கா வில் மாதம் 11 வங்கிகள் நிதி சீர்குலைவு காரணமாக திவாலாகி வருகின்றன. இதுவரை இந்த ஆண்டு 133 வங்கிகள் காலியாகியுள்ளன.

கடந்த ஆண்டை விட இது ஐந்து மடங்கு அதிகமாகும்.
பொருளாதார சீர்குலைவால் பாதிக்கப்பட்ட அமெரிக்க வங்கிகள் தொடர்ந்து திவாலாகி வருகின்றன. சராசரியாக மாதத்திற்கு 11 பெரிய மற்றும் சிறிய வங்கிகள் திவாலாகி வருகின்றன. கடந்த ஆண்டு மொத்தம் 25 வங்கிள்தான் திவாலாகின. ஆனால் இந்த ஆண்டு இதுவரை 133 வங்கிகள் போண்டியாகியுள்ளன.

கடந்த 18 ஆண்டுகளில் அதிகளவில் வங்கிகள் திவால் ஆனது இந்த ஆண்டில்தான். கடந்த 1992ம் ஆண்டு 181 வங்கிகள் திவாலானது குறிப்பிடத்தக்கது.

லேட்டஸ்டாக, ரிபப்ளிக் பெடரல் வங்கி, வேலி கேபிடல் பாங்க், சொலூசன்ஸ் வங்கி ஆகியவை மூடப்பட்டுள்ளன. டிசம்பர் 11ம் தேதி இவை கடையை மூடி விட்டன.

இவற்றின் மூலம் 252.1 மில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளது அமெரிக்க காப்பீட்டுத் துறைக்கு. கடந்த ஆண்டு லேஹ்மன் பிரதர்ஸ் வங்கி திவாலானதைத் தொடர்ந்து 25 வங்கிகள் மூடப்பட்டன. இந்த ஆண்டு நிலைமை இன்னும் மோசமாகி 133 வங்கிகள் மூடப்பட்டுள்ளன. அதாவது வாரந்தோறும் சராசரியாக 11 வங்கிகள்.

மொத்தம் 148 வங்கிகள் மூடுவிழா கண்டுள்ளன. இவற்றால் அமெரிக்க காப்பீட்டுத் துறைக்கு ஏற்பட்டுள்ள இழப்பு 100 பில்லியன் டாலர் என்கின்றனர் அதிகாரிகள்.

source:thatstamil

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மாதம் 11 அமெரிக்க வங்கிகள் திவால் - இதுவரை 133 காலி"

கருத்துரையிடுக