புதுடெல்லி: ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான சங்க்பரிவார்தான் பாப்ரி மஸ்ஜிதை தகர்த்ததற்கான முழு பொறுப்பும் என்று மத்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம் மக்களவையில் லிபர்ஹான் கமிசன் மீதான விவாதத்தில் பதிலளிக்கும்போது தெரிவித்தார்.
ஆர்.எஸ்.எஸ் தான் எல்லாவற்றிற்கும் தலைமையேற்றது. பாப்ரி மஸ்ஜிதை தகர்த்ததில் ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு வெட்கமோ துக்கமோ இல்லை. கல்யாண்சிங் அரசை நம்பியதால் நரசிம்மராவிற்கு அரசியல் ரீதியாக தவறு ஏற்பட்டது.
சிதம்பரம் பேச ஆரம்பித்ததிலிருந்து கடைசிவரை பா.ஜ.க உறுப்பினர்கள் ரகளையில் ஈடுபட்டனர். பா.ஜ.க உறுப்பினர்களின் சப்தம் சிதம்பரத்தின் சப்தத்தைவிட உயர்ந்ததால் சபையில் சிதம்பரம் பேசியதை முழுமையாக கேட்க இயலவில்லை.
நேற்று மதியம் துவங்கிய விவாதத்தில் முதலில் சி.பி.எம் கட்சியின் உறுப்பினர் பசுதேவ் ஆச்சார்யா பங்கெடுத்தார். பாப்ரி மஸ்ஜித் தகர்த்த நிகழ்வில் நரசிம்மராவின் பங்கை கமிசன் விமர்சிக்கவில்லை. காங்கிரஸ் கட்சி வகுப்புவாதிகளுடன் கூட்டணி வைத்ததாக ஆச்சார்யா சுட்டிக்காட்டினார். தொடர்ந்து பா.ஜ.க உறுப்பினர் சுஷ்மா சுவராஜ் லிபர்ஹான் கமிசன் அறிக்கையை வாபஸ் பெறவேண்டும் என்று கோரினார்.
விவாதத்தின்போது இடைக்கிடை கூச்சல் ஏற்பட்டாலும் பெரும்பாலும் அமைதியாகவே நடந்தது. விவாதம் பூர்த்தியடைந்தவுடன் சபாநாயகர் மீரா குமார் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள் பேசலாம் என அறிவித்தார்.
தொடர்ந்து பேசிய பேனி பிரசாத் வர்மா வாஜ்பாயை அயோக்கியன் என்று கூறியதோடு அவையில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. இதற்கு பா.சிதம்பரமும்,மீரா குமாரும் மன்னிப்பு கேட்டபிறகும்,பேனி பிரசாத் வர்மா நேரிடையாக மன்னிப்பு கோரியபொழுதும் பா.ஜ.க உறுப்பினர்கள் அடங்கவில்லை. இதனைத்தொடர்ந்து சபாநாயகர் அவையை இரண்டுமுறை ஒத்திவைத்தார்.
மீண்டும் அவை கூடியபொழுது மீண்டும் பா.ஜ.க உறுப்பினர்கள் ரகளையில் ஈடுபட்டனர். தொடர்ந்து பா.சிதம்பரம் லிபரான் கமிஷன் விவாதத்திற்கு பதிலளித்து பேச ஆரம்பித்ததிலிருந்து கடைசிவரை பா.ஜா.க உறுப்பினர்கள் ”ஜெய் ஜெய் அடல்ஜி” ”ஷேம் ஷேம்” என்று கூக்குரலிட்டவாறிருந்தனர்.
சிதம்பரம் பேசுகையில், ”திட்டமிட்டு மிகக்கொடூரமான முறையில்தான் கரசேவகர்கள் பாப்ரி மஸ்ஜிதை தகர்த்துள்ளனர். பாப்ரி மஸ்ஜித் தகர்த்தபொழுது போலீசும், மாவட்ட நிர்வாகமும் மெளனமாகயிருந்துள்ளனர். அயோத்தியா இயக்கத்தின் எல்லா பகுதிகளையும் நிர்வகித்தது ஆர்.எஸ்.எஸ்.அத்வானிக்கு அனைத்தும் தெரியும். சங்க்பரிவார் உறுப்பினர்கள்தான் பாப்ரி மஸ்ஜிதை தகர்ப்பதற்கு அதன் மேல் பகுதியை நோக்கி ஏறினர். உச்சநீதிமன்றத்தில் பா.ஜ.க அளித்த எல்லா வாக்குறுதிகளையும் மீறினர். பா.ஜ.க வையும், உ.பி.அரசையும் நம்பியதால் மோசமான தவறு மத்திய அரசுக்கு ஏற்பட்டது. கல்யாண் சிங் அரசும் மஸ்ஜிதை பாதுகாப்பதாக மத்திய அரசுக்கும், உச்சநீதிமன்றத்திற்கும் உறுதியளித்தது. இதனை நம்பியதால் காங்கிரஸ் அரசு தவறிழைத்துவிட்டது. இதற்காக வருத்தப்படுகிறோம்.” இவ்வாறு பா.சிதம்பரம் உரையாற்றினார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "பாப்ரி மஸ்ஜிதை தகர்த்தது ஆர்.எஸ்.எஸ், நரசிம்மராவும் தவறிழைத்துள்ளார்: பா.சிதம்பரம்"
கருத்துரையிடுக