10 டிச., 2009

கட்டாய மதமாற்றத்தை தடைச்செய்ய சட்டம் வேண்டும்: கேரள நீதிமன்றம்

கொச்சி: மாநிலத்தில் நிர்பந்தமான முறையில் மதமாற்றம் நடப்பதை தடைச்செய்ய சட்டம் கொண்டுவருவதற்கு அரசு ஆலோசனை நடத்தவேண்டுமென்று கேரள மாநில நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
கல்வி நிலையங்கள் மதமாற்றத்திற்கான மதப்பிரச்சாரத்திற்கான களமாகக்கூடாது என உயர்நீதிமன்ற நீதிபதி கெ.டி.சங்கரன் கூறினார்.ஒரு சமுதாயத்திற்கு இருவேறு சமுதாயத்தைச்சார்ந்த மாணவிகளை மதமாற்றம் செய்வதற்கு முயற்சிகள் நடப்பதாகவும் வெளிநாட்டு சக்திகளின் உதவியுடன் நடக்கும் இந்த முயற்சியை அரசும் பொதுமக்களும் அக்கறையோடு பார்க்கவேண்டுமென்றும் நீதிமன்றம் கூறுகிறது.
பத்தணம் திட்டையில் இரண்டு எம்.பி.ஏ பயிலும் மாணவிகளை காதலிப்பதாக நடித்து கட்த்திச்சென்று மதமாற்றியதாக கூறப்படும் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஷாஹன்ஷா, சிராஜுதீன் ஆகியோரின் முன் ஜாமீன் மனுக்களை தள்ளுபடிச்செய்துக்கொண்டு தீர்ப்பு வழங்கியபொழுதுதான் நீதிபதி இக்கருத்தை தெரிவித்தார்.
குடிமக்களின் மதஉரிமைகளை பாதுகாப்பதற்கு அரசிற்கு உரிமையுண்டு. அரசியல் சட்டத்தின் 25-ஆம் பிரிவு வழங்கும் மத சுதந்திரம் என்பது கட்டாயமதமாற்றத்திற்கான சட்டம் அல்ல என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
சொந்த விருப்பப்படி பிள்ளைகளை வளர்த்தும் பெற்றோரின் உரிமைகளை பாதுகாக்கவேண்டியுள்ளது. மத சுதந்திரம் என்பது குடும்ப உறவுகளையும் கலாச்சாரத்தையும் தகர்க்கும் வழியாக மாறக்கூடாது. பெற்றோரின் உரிமைகளை பாதுகாக்க நாட்டில் சட்டம் உண்டு. கல்வி நிறுவனங்களும், தொழில் கல்வி நிறுவனங்களும் மத பிரச்சாரத்திற்கான களமல்ல.

அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்கள் கல்விநிலையங்களை மதமாற்றத்திற்கும் மத பிரச்சாரத்திற்குமான களங்களாக உருவாக்கவில்லை. நிர்பந்தமான மதமாற்றம் சட்டத்திற்கு புறம்பானதும் மதங்களுக்கிடையே மோதலையும் ஏற்படுத்தும்.
இந்தியாவில் வேறு நில மாநிலங்கள் மதமாற்றத்தை தடைச்செய்ததாகவும் நீதிபதி சுட்டிக்காட்டினார். ஜாதியின் பெயரால் நம்பிக்கையின் பெயரால் மக்கள் மோதலை வளர்த்தக்கூடாது. மத அறிஞர்களாகுவதற்கு விருப்பம் உடையவர்கள் அவர்களுடைய வழிகளை தேர்ந்தெடுக்கலாம். ஆனால் இது உடன்பயில்வோரின் எதிர்காலத்தை தகர்க்கக்கூடாது என்றும் நீதிமன்றம் கூறியது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவின் நகலை முதன்மை செயலளாருக்கு அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கட்டாய மதமாற்றத்தை தடைச்செய்ய சட்டம் வேண்டும்: கேரள நீதிமன்றம்"

கருத்துரையிடுக