14 டிச., 2009

கோடிகளை கொட்டி உருவாக்கும் சிலை நிர்மாணத்திற்கெதிராக செனகல் இமாம்கள்

தகர்: செனகல் நாட்டின் தலைநகரில் உருவாகிக்கொண்டிருக்கும் மிகப்பெரிய சிலை நிர்மாணத்திற்கெதிராக அந்நாட்டின் இமாம்கள்(பள்ளிவாசல்களில் பணியாற்றும் முஸ்லிம் மார்க்க அறிஞர்கள்) களமிறங்கியுள்ளனர்.

விக்கிரகங்களை நிர்மாணிப்பதற்கெதிராகவும், பணத்தை வாரியிறைத்து வீண்விரயம் செய்வதற்கெதிராகவும் கடந்த ஜும்ஆ சொற்பொழிவுகளில் இமாம்கள் உபதேசம் அளித்தார்கள்.

ஆப்ரிக்காவின் மறுமலர்ச்சிக்கான நினைவுச்சின்னம் என்ற பெயரில் நிர்மாணிக்கப்படும் இச்சிலை செனகலின் அதிபர் அப்துலாயே காதாவின் கனவுத்திட்டம் ஆகும். சிலை நிர்மாணிப்பதற்கான பணி பூர்த்தியானால் இச்சிலை அமெரிக்காவின் சுதந்திரதேவி சிலையைவிட பெரியதாகயிருக்கும் என கருதப்படுகிறது.

ஏழை நாடான செனகல் இச்சிலை நிர்மாணத்திற்காக ஒதுக்கியுள்ள தொகை 270 லட்சம் டாலர்கள். திடமான மனிதன் ஒருவன் ஒரு குழந்தையை ஒரு கையால் உயர்த்தி பிடித்தவாறு மற்றொரு கையால் ஒரு பெண்ணை பிடித்திருக்கும் நிலையிலான சிலையைத்தான் செனகல் நிர்மாணிக்கிறது.

விமானத்தில் செனகலுக்கு வருபவர்கள் முதலில் காண்பது நிர்வாண நிலையிலிலுள்ள ஆணையும் பெண்ணையும் கொண்ட சிலையைத்தான் என்று இமாம்கள் குற்றஞ்சுமத்துகின்றனர். சிலையை காணவரும் பார்வையாளர்களிடமிருந்து பணத்தை வசூலிக்கவும் அதில் ஒரு பகுதியை தான் கைப்பற்றவும் செனகல் அதிபரின் முடிவு அந்நாட்டுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிலை நிர்மாணத்திற்கு தான் உதவி செய்ததாகவும் ஆதலால் அதன் வருமானத்தில் ஒரு பகுதி தனக்கு சேரவேண்டும் என்பது அதிபரின் நியாயம்.

செய்தி:தேஜஸ மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கோடிகளை கொட்டி உருவாக்கும் சிலை நிர்மாணத்திற்கெதிராக செனகல் இமாம்கள்"

கருத்துரையிடுக