9 டிச., 2009

அரசியல் ரீதியாக எடுக்கும் முடிவுகளை செயல்படுத்த இயலாது: இந்தியா

கோபன்ஹெகன்: அரசியல்ரீதியாக எடுக்கும் முடிவுகளை செயல்படுத்த எவரையும் நிர்பந்திக்க இயலாது என்று இந்தியா கூறியுள்ளது.

கோபன்ஹெகனில் சர்வதேச பருவநிலை மாற்றம் குறித்த உச்சிமாநாட்டில் இந்திய பிரநிதியாக பங்கேற்று உரை நிகழ்த்திய பிரதமரின் சிறப்புத்தூதர் ஷியாம் சரண் இதனை தெளிவுப்படுத்தினார்.

இந்தியா எவருடைய நிர்பந்தத்தின் மூலமல்ல பைங்குடில் வாயுக்களின் (greenhouse gases) வெளியேற்றத்தை கட்டுப்படுத்த தீர்மானமெடுத்தது என்று கூறிய சரண் சட்டரீதியான பருவநிலை மாற்றம் சம்பந்தமான கொள்கையை வளர்ச்சியடைந்த நாடுகள் பின்பற்றவேண்டுமென்று வலியுறுத்தினார்.

பைங்குடில் வாயுக்கள் மனித சமூகத்திற்கு பீதியை ஏற்படுத்தக்கூடியது என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் அறிக்கையை ஐரோப்பியன் யூனியனும், ஐ.நாவும் உச்சிமாநாட்டில் வரவேற்றன.

ஒபாமாவின் அறிக்கை பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான அவசியத்தை வலியுறுத்துவதாகும் என்று ஐரோப்பியன் யூனியன் செய்தித் தொடர்பாளர் கூறினார். ஒபாமாவின் அறிக்கை அமெரிக்க காங்கிரஸின் தெளிவான ஆலோசனையாகும். பைங்குடில் வாயுக்களை கட்டுப்படுத்த அமெரிக்க காங்கிரசின் அனுமதி அவசியம். அமெரிக்க அதிபரின் புதிய அறிக்கை பைங்குடில் வாயுக்களை கட்டுப்படுத்த சட்டம் கொண்டுவருவதற்கான ஒபாமாவின் விருப்பத்திற்கான செய்தி என்று பி.பி.சி மார்க் மார்டல் கூறுகிறார்.

இந்த உச்சி மாநாட்டில் ஐ.நா.பொதுச்செயலாளர் பான் கீ மூன், பிரிட்டீஷ் பிரதமர் கார்டன் பிரவுன் ஆகியோர் உரையாற்றினர். வலுவான முழுமையான ஒப்பந்தம் தேவையென டென்மார்க் பிரதமர் லார்ஸ் கூறினார். உச்சிமாநாடு முடிவடையும்பொழுது உலகத்தின் நல்ல எதிர்காலத்திற்கு சிலவற்றை அளிக்கலாமென அவர் கூறினார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அரசியல் ரீதியாக எடுக்கும் முடிவுகளை செயல்படுத்த இயலாது: இந்தியா"

கருத்துரையிடுக