21 டிச., 2009

'ரா'வின் முன்னாள் தலைமை அதிகாரிக்கெதிரான ஆவணம் மாயம்

இந்தியாவின் உளவு அமைப்பான ”ரா” வின் முன்னாள் தலைவர் ஆனந்த் கே.வர்மாவுக்கெதிரான ஊழல் குற்றச்சாட்டு சம்பந்தமாக சி.பி.ஐ யின் வசமிருந்த 10 வருட பழக்கமுடைய விசாரணை அறிக்கை காணாமல் போயுள்ளது.

'ரா' அமைப்பின் நிதியை சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தியதாக ஆனந்த் கே.வர்மாவுக்கெதிராக ரா எம்ப்ளாயீஸ் அசோசியேசன் பொதுச்செயலாளர் ஆர்.கே.யாதவ் கொடுத்த வழக்கில் முக்கிய விபரங்கள் அடங்கிய விசாரணை அறிக்கைதான் சி.பி.ஐ யின் வசமிருந்து காணாமல் போயுள்ளது.

இது சம்பந்தமாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி யாதவ் அளித்த மனுவிற்கு பதிலளித்த கோப்பு காணாமல் போய்விட்டதாக சி.பி.ஐ வட்டாரங்கள் அறிவித்துள்ளன.

கோப்பின் தற்போதைய நிலையை அறிவிக்குமாறு சி.பி.ஐ யிடம் தீஸ்ஹஸாரி நீதிமன்றமும் கோரியிருந்தது. 1999 ஆம் ஆண்டுதான் யாதவ் சி.பி.ஐக்கும் நீதிமன்றத்திற்கும் புகார் அளித்திருந்தார். அன்றைய சி.பி.ஐ இயக்குநரான ஆர்.கே.ராகவனை சந்தித்து தான் வர்மாவுக்கெதிராக புகார் அளித்திருப்பதாக விளக்கியிருந்தார் யாதவ்.

மத்திய விஜிலென்ஸ் கமிஷன் தலைவரான என்.விட்டலும் புகாரை நேரடியாகவே அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து சி.பி.ஐ ஆர்.என்.ஆசாத் என்ற அதிகாரியிடம் இவ்வழக்கை விசாரிக்கும் பொறுப்பை ஒப்படைத்திருந்தது.

வர்மாவின் வங்கிக்கணக்கு உட்பட பல்வேறு ஆதாரங்களை ஆஸாத் பரிசோதித்திருந்தார். இதற்கிடையே ஆஸாதை இடமாற்றினார்கள். அதற்கு பிறகு விசாரணையில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.

கடந்த வருடம்தான் ஃபைல் காணாமல் போன விவகாரம் தெரிய வந்தது. ஃபைலை சி.பி.ஐ அதிகாரிகளின் துணையோடு 'ரா' உளவுத்துறை அதிகாரிகள் திருடவோ அல்லது அழிக்கவோ செய்திருக்கலாம் என தான் சந்தேகிப்பதாக யாதவ் தெரிவிக்கிறார். ஃபைல் சம்பந்தமான விசாரணையின்போது வர்மா அதே ஆண்டு ஓய்வு பெற்றதால் அவருக்கெதிராக எந்தவொரு விசாரணையும் நடத்தவில்லையென சி.பி.ஐ கூறுகிறது.

இலங்கையில் செயல்படுவதற்காக அரசு அளித்த பணத்தை வர்மா கையாடல் செய்தார் என்பது யாதவின் முக்கிய குற்றச்சாட்டு. டெல்லியிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் வர்மாவிற்கு உள்ள சொத்துக்கள் சம்பந்தமான விபரத்தையும் யாதவ் சுட்டிக்காட்டியிருந்தார்.

யாதவ் கூறுகின்றபடி, வர்மாவிற்கு டெல்லியிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் முக்கிய எட்டு இடங்களில் வர்மாவிற்கு சொத்துகள் உள்ளன என்று யாதவ் குற்றஞ்சாட்டியிருந்தார்.ஆனால் வர்மாவோ தவறான நடவடிக்கைகள் மூலம் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டவர் தான் யாதவ் என்றும் தனக்கெதிரான குற்றச்சாட்டுகள் வாபஸ் பெற வேண்டுமெனக் கோரி பிரதமருக்கு கடிதம் எழுத தன்னிடம் கூறியதற்கு தான் அதனை மறுத்து பணியிலிருந்து விடுவித்ததால் தனக்கெதிராக வழக்குத் தொடுத்துள்ளதாகவும் கூறுகிறார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "'ரா'வின் முன்னாள் தலைமை அதிகாரிக்கெதிரான ஆவணம் மாயம்"

கருத்துரையிடுக