58, 48, 36? தலைப்பை பார்த்து எண் ஜோதிடம் என்று நினைத்து குழம்பி விடாதீர்கள். இந்த புதிர் தரும் செய்தி இதுதான்.
கடந்த வெள்ளி மதியம் 331 பயணிகளுடன் லன்டன் ஹீத்ரு விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்த எமிரேட்ஸ் EK004 விமானம், மூன்று பயணிகள் சந்தேகிக்கும் வகையில் விமான ஊழியரிடம் விடுத்த 'வெடிகுண்டு' அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனையடுத்து லண்டன் பெருநகர காவல்துறை உசார்படுத்தப்பட்டு ஆயுதம் தாங்கிய அதிகாரிகளால் அவ்விமானம் சோதனையிடப்பட்டது. அனைத்து பயணிகளும் கீழே இறக்கிவிடப்பட்டு, விமானமும் மோப்ப நாய்களைக் கொண்டு சோதனையிடப்பட்ட பின்னரே அவ்விமானம் புறப்பட்டு சென்றது.
கைது செய்யப்பட்ட அம்மூன்று நபர்களைப் பற்றிய செய்தியில் அவர்களின் வயதைத் தவிர வேறந்த தகவலும் இல்லை. இச்சம்பவத்தை சிறு பெட்டிச் செய்தியாக ஓரிரு செய்தித் தாள்களே செய்தி வெளியிட்டிருந்தன. இதை தவிர்த்து வேறெதிலும் வரவில்லை. அம்மூவரைப் பற்றிய மற்ற எந்த விபரமும் இல்லை.
முஸ்லிம் பெயராக இல்லாததாலோ என்னவோ ஊடகங்களின் 'கற்பனை குதிரை' உரங்கி விட்டது போலும். அல்லது வயதைச் சொன்னால் முழுவிபரம் சொல்லும் ஜோதிடம் ஏதும் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோ என்னவோ?! தெரியவில்லை.
0 கருத்துகள்: on "58, 48, 36?"
கருத்துரையிடுக