பெங்களூரு:லவ் ஜிஹாத் தொடர்பான வழக்கில் இறுதி அறிக்கை சமர்ப்பிக்க கர்நாடகா உயர்நீதிமன்றம் மாநில காவல்துறைக்கு 6 வார அவகாசம் அளித்துள்ளது.
மாநில அரசின் மனுவைத் தொடர்ந்துதான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாற்று மதத்தைச் சார்ந்த பெண்களை முஸ்லிம் இளைஞர்கள் வசீகரித்து மதமாற்றுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டை டி.ஐ.ஜி மாலினி கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான சி.ஐ.டி சிறப்பு பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.
லவ் ஜிஹாத் தொடர்பாக கடந்த மாதம் 9 ஆம் தேதி கேரள உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் நீதிபதிகளான கெ.சிரீதர் ராவ், ரவி பி மள்ளிமத் ஆகியோர் அடங்கும் டிவிசன் பெஞ்ச் கவனத்தில் கொண்டுள்ளது.
ஒரு ஹிந்து இளம்பெண்ணும், ஒரு முஸ்லிம் இளைஞரும் இடையே நடந்த காதல் திருமணத்தில் கட்டாய மதமாற்றம் எதுவும் நடைபெறவில்லை என கடந்த நவம்பர் 13 ஆம் தேதி காவல்துறை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த இடைக்கால அறிக்கையில் கூறியிருந்தது.
கர்நாடகாவைச்சார்ந்த சில்ஜா ராஜ் என்ற பெண்மணியும், கேரளாவைச்சார்ந்த அஸ்கரும் காதல் திருமணம் செய்ததை சில்ஜாவின் விருப்பமில்லாமல் நடந்த திருமணம் என்றுக் கூறி அளித்த புகார் மனுவை ஏற்கனவே கர்நாடகா நீதிமன்றம் தள்ளுபடிச் செய்திருந்தது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "லவ் ஜிஹாத்:இறுதி அறிக்கை சமர்ப்பிக்க காவல்துறைக்கு 6 வார அவகாசம்"
கருத்துரையிடுக