புதுடெல்லி:இஸ்ரேலின் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அடங்கிய பிரதிநிதிக்குழு ஒன்று இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்ய புறப்பட்டதாக அமெரிக்க அரபு தொலைக்காட்சி அல்ஹவ்ரா செய்தி வெளியிட்டுள்ளது.
தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசகர் உஸி அராதின் தலைமையில்தான் இக்குழு இந்தியாவுக்கு புறப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள அணு ஆயுதங்கள் தவறானவர்களின் கைகளில் போய்விடும் என்பது பற்றிய கவலையையும் சுற்றுபயணத்தின்போது இக்குழு வெளிப்படுத்தும் என அத்தொலைக்காட்சி மேலும் கூறியுள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "இஸ்ரேலிய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் குழு இந்தியாவிற்கு ரகசிய பயணம்"
கருத்துரையிடுக