18 ஜன., 2010

ஹைத்தியில் ராணுவ ஆதிக்கத்தை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சி- நிகரகுவா அதிபர் குற்றச்சாட்டு

மனாகுவா:ஹைத்தியில் ராணுவ ஆதிக்கத்தை நிலைநாட்ட அமெரிக்கா பூகம்ப பேரிடரை பயன்படுத்துவதாக நிகரகுவா அதிபர் டானியல் ஒர்டேகா குற்றஞ்சாட்டியுள்ளார். ஹைத்தியில் புனர்நிர்மாண நடவடிக்கைகள் கவலையை ஏற்படுத்துகிறது. அமெரிக்க ராணுவம் விமான நிலையத்தின் கட்டுப்பாட்டை தன் வசம் கொண்டுவந்துள்ளது.

ஒர்டேகா இது குறித்து தெரிவிக்கையில், "பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதாக 10 ஆயிரம் ராணுவத்தினரை ஹைத்திக்கு அனுப்பியதாக பெண்டகன் தெரிவித்துள்ளது. ஹைத்தியின் தலைநகரான போர்ட்டோ பிரின்சில் முக்கிய விமானநிலையத்தின் கட்டுப்பாட்டை அமெரிக்க ராணுவத்தின் 82 ஆம் ஏர்போண் டிவிசனில் பாரா ட்ரூப் கடந்த வெள்ளிக்கிழமை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது. அதிபர் மாளிகை உட்பட தகர்ந்த நிலையில் ஹைத்தி அரசு ஏறக்குறைய செயலற்ற நிலையில் உள்ளது. ஹைத்தியில் ராணுவத்தை அனுப்பியது நியாயமல்ல. ஹைத்திக்கு தேவை பேரிடர் நிவாரண நடவடிக்கைகளாகும். ராணுவத்தை அல்ல. எல்லா நாடுகளும் ராணுவத்தை அனுப்பினால் அது பைத்தியக்காரத்தனமாகும். ஹைத்தியை ஆக்கிரமித்துள்ள ராணுவத்தினரை அமெரிக்கா வாபஸ் பெறும் என்று நம்புகிறேன்". இவ்வாறு ஒர்டேகா கூறினார்.

1915 ஆம் ஆண்டு அரசியல் ஸ்தரத்தன்மையை காரணம் காட்டி அமெரிக்கா ஹைத்தியை ஆக்கிரமித்தது. 1934 வரை அமெரிக்கா ராணுவம் ஹைத்தியில் நிலைக்கொண்டது. ஏற்கனவே ஹைத்திக்கு 31 ராணுவ டாக்டர்கள் உட்பட நிவாரண நடவடிக்கை குழுவினரையும் நிவாரணப்பொருட்களையும் ஹைத்திக்கு அனுப்பியிருந்தது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஹைத்தியில் ராணுவ ஆதிக்கத்தை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சி- நிகரகுவா அதிபர் குற்றச்சாட்டு"

கருத்துரையிடுக