புதுடெல்லி:சர்ச்சையை ஏற்படுத்திய ஐ.பி.எல் கிரிக்கெட் வீரர்களின் ஏலத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை புறக்கணித்ததற்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளரும், பாலிவுட் நடிகருமான ஷாரூக்கான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் வீரர்களை அணியில் எடுத்திருக்க வேண்டும் என்று கூறிய ஷாரூக் ஏலத்திலிருந்து அவர்களை புறக்கணிக்க திட்டமிட்டால் அதனை ஏற்கனவே செய்திருக்கலாம் என்றார்.அவர்களை அணியில் சேர்த்திருக்கவேண்டும் என்பதே எனது கருத்து. மற்றவர்கள் கூறுவதல்லாத ஒன்றையும் நான் கூறவில்லை. எனக்கு பாகிஸ்தான் வீரர் அப்துல் ரஸ்ஸாக்கை அணியில் சேர்க்கவேண்டும் என்ற விருப்பம் இருந்தது. அது பத்திரிகைகளிலும் வந்தது என்று நான் கருதுகிறேன். இதனை கங்கூலியும் கவனித்து வந்தார்.
ஏலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை குறித்து நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளன் என்ற முறையில் எனக்கு துக்கமுண்டு. ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அதனை பேசித் தீர்த்திருக்கலாம்.அப்போது எல்லாம் சுமூகமாக நடந்திருக்கும்.
சில நபர்கள் திடீரென சரியா தவறா என்பதைக் குறித்து ஆராயாமல் ஆஸ்திரேலிய வீரர்களை ஆட அனுமதிக்க மாட்டோம் என்று கூறுகின்றார்கள். மறுபுறம் 70,80, 90 கோடிகளை முடக்கிவிட்டு ஆஸ்திரேலிய வீரர்களை எடுக்கவேண்டுமா? வேண்டாமா? என்று குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார்கள். நான் பொய்க் கூறவில்லை.
பாகிஸ்தான் வீரர்கள் உலகிலேயே சிறந்த டுவண்டி-20 வீரர்களாவர் என்றே நான் நம்புகிறேன். அவர்கள் உலக சாம்பியன்கள். ஏலத்தில் அவர்களை உட்படுத்திய பிறகு எவரையும் அணிகளில் சேர்க்காதது சரியல்ல. இந்த விவாதத்தின் மறு புறத்தை(நான் முஸ்லிம் என்பதால்) சந்திக்க வேண்டிவரும்.
முதல் வருடம் எனது அணியில் ஐந்து பாகிஸ்தான் வீரர்கள் இருந்தனர். அப்பொழுது சிலர் கூறினர், "ஆப்கே பாஸ் பஹுத் ஸாரே பாகிஸ்தானி ஃப்லேயர்ஸ் ஹே!" (உங்களுடன் நிறைய பாகிஸ்தான் வீரர்கள் இருக்கின்றனரே!) என்று. தற்ப்பொழுது எனது பயிற்சி அணியில் வாசிம் பாய்(வாசிம் அக்ரம்) உள்ளார். ப்ளீஸ், விளையாட்டை விளையாட்டாக கருதுங்கள்! இதனை ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின்போது ஷாரூக்கான் தெரிவித்தார்.
செய்தி:மாத்யமம்
செய்தி:மாத்யமம்
0 கருத்துகள்: on "ஐ.பி.எல் ஏலத்திற்கெதிராக ஷாரூக்"
கருத்துரையிடுக