18 ஜன., 2010

சுய பாதுகாப்புக்காக கொலை செய்யலாம்- சுப்ரீம் கோர்ட் அதிரடி

டெல்லி: தனது உயிருக்கு அபாயம் ஏற்படும்போது கோழைத்தனமாக இருக்க முடியாது. எனவே தங்களது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவோரைக் கொலை செய்யும் உரிமை சம்பந்தப்பட்டவர்களுக்கு உள்ளது என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

அதுபோன்ற செயல்கள் சட்டத்திற்கு உட்பட்டவைதான். அதை பிற கொலைகளுக்கு சமமாக கருத முடியாது என்றும் உச்சநீதி்மன்றம் தெரிவித்துள்ளது.

ஒரு வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் தல்வீர் பண்டாரி மற்றும் அசோக் குமார் கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இதுகுறித்து கூறுகையில்,
சட்டத்தை மதிக்கும் ஒரு குடிமகன், சட்டவிரோதமான காரியத்தால் தனது உயிருக்கு ஆபத்து நேரிடும்போது கோழைத்தனமாக இருப்பதை அல்லது இருக்க வேண்டும் என்று சட்டம் கூறவில்லை. அதை சட்டம் அனுமதிக்கவும் செய்யாது, அப்படி இருக்க வேண்டிய தேவையும் இல்லை.

சட்டத்திற்கு உட்பட்ட வகையில், தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும்போது, அதை செய்ய முனைவோரின் உயிரைப் பறிக்கும் செயலாகவே இருந்தாலும் சரி அதை கொலையாக கருத முடியாது, கருதக் கூடாது என்று கூறியுள்ளனர்.
ஒரு கட்டுப்பாட்டையும் கூடவே விதித்துள்ளது உச்சநீதி்மன்றம். யாரையும் பழி வாங்கவோ, பழைய பகையை தீர்த்துக் கொள்ளவோ இந்த விதிமுறைகளை பயன்படுத்தக் கூடாது என கண்டிப்பாகக் கூறியுள்ளது. அப்படி நடக்காமல் இருக்காது. அப்படி ஏதாவது நடந்தால், அதை கூடுதல் கண்காணிப்புடன் இருந்து கண்டுபிடிக்க வேண்டியது போலீசாரின் கடமை.
source:thatstamil,dinakaran

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சுய பாதுகாப்புக்காக கொலை செய்யலாம்- சுப்ரீம் கோர்ட் அதிரடி"

கருத்துரையிடுக