தற்போதைய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் பதவிக்காலம் முடிவடைவதைத் தொடர்ந்து இந்திய வெளியுறவுத்துறை முன்னாள் செயலர் சிவசங்கர மேனன் தேசிய பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.
பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் மற்றும் சந்தோஷ் மோகன் தேவ் உள்பட அரசியல்வாதிகள் மற்றும் முன்னாள் அரசு அதிகாரிகளின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாகவும், வெள்ளிக் கிழமையன்று நடைபெறும் காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில், இவர்களில் ஒருவரின் பெயர் இறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
மேனன் தவிர, அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராகப் பணியாற்றிய ரோனன் சென்னின் பெயரும் பரிசீலனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவர் அமெரிக்கத் தூதராக இருந்தபோது, இந்திய - அமெரிக்க அணு ஒப்பந்தத்தை எதிர்த்த மக்களவை உறுப்பினர்களை "தலையில்லாக் கோழிகள்" என்று கூறியது குறிப்பிடத் தக்கது.
0 கருத்துகள்: on "தேசிய பாதுகாப்பு ஆலோசகராக சிவசங்கர் மேனன்?"
கருத்துரையிடுக