25 ஜன., 2010

அவதூறு பிரச்சாரங்களுக்கு மத்தியிலும் இஸ்லாத்தின் நற்செய்தி அடையாளம் காணப்படும்:யுவான் ரிட்லி

குற்றிப்புரம்:அமெரிக்க, ஐரோப்பிய, இஸ்ரேலிய ஏகாதிபத்திய சக்திகள் எவ்வளவுதான் இஸ்லாத்திற்கெதிராக அவதூறான பிரச்சாரங்களை மேற்க்கொண்டாலும் இஸ்லாத்தின் அன்பு மற்றும் சமாதானத்தின் நற்செய்தி மக்களால் அடையாளம் காணப்படும் ஒரு நாள் வந்தே தீரும் என பிரபல பத்திரிகையாளரும், சர்வதேச மனித உரிமைப் போராளியுமான யுவானி ரிட்லி கூறினார்.

கேரள மாநிலம் குற்றிப்புரம் ஸஃபா நகரில் ஜமாஅத்தே இஸ்லாமியின் பெண்கள் மாநாட்டை துவக்கி வைக்கவிருந்தார் அவர். ஆனால் லண்டனில் இந்திய தூதரகம் அவருக்கு இந்தியா செல்ல விசா மறுத்ததால் வீடியோ கான்ஃப்ரன்சிங் மூலமாக மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். "அமெரிக்க ஏகாதிபத்தியம் இஸ்லாத்திற்கெதிராக அவதூறான பிரச்சாரங்களை நடத்திக் கொண்டிருக்கிறது. அவர்களை ஆக்கிரமிப்புகளையும் அருவருக்கத்தக்க நடவடிக்கைகளையும் மறைப்பதற்காகத்தான் இந்தப்பிரச்சாரத்தை மேற்க்கொள்கிறார்கள்.

ஃபலஸ்தீனில் துயரத்தில் ஆழ்ந்துள்ள மக்களுக்கு ஆதரவாக பேசுகிறேன் என்பதற்காகவே என்னை ஏகாதிபத்திய சக்திகள் நோட்டமிடுகின்றன. ஃபலஸ்தீனிலும், ஆஃப்கானிலும்,ஈராக்கிலும் கொடூரமான தாக்குதல்கள் மூலமும், கூட்டுக்கொலைகள் மூலமும் குண்டுகளை வீசுவதன் மூலமும் முஸ்லிம்களின் மீது நிரந்தரமாக ஏகாதிபத்திய சக்திகள் போரிட்டு வருகின்றன.

இஸ்லாம் பெண்களுக்கெதிரான மார்க்கம் என்ற மேற்கத்திய வாதிகளின் பொய் பிரச்சாரம் வெற்றிப்பெறாது. ஆஃப்கானிஸ்தானில் தாலிபான்களின் வசம் சிக்கிய என்னை இஸ்லாத்தை நோக்கி திருப்பியது அவர்களுடைய கண்ணியமான நடவடிக்கைகளும் சுத்தமான நிலைபாடுகளும் தான். இஸ்லாம் பெண்களுக்கெதிரான மார்க்கம் என்றால் தாலிபான் போராளிகள் என்னிடம் ஒருபோது கண்ணியமாக நடந்துக் கொண்டிருக்க மாட்டார்கள். மேலும் எனது வாழ்வில் அது திருப்புமுனையும் ஆகியிருக்காது.

ஏகாதிபத்தியமும், சியோனிஷமுதான் இன்று உலகம் சந்திக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல்கள். இவ்விரண்டு சக்திகளும் இஸ்லாத்திற்கு மட்டுமல்ல விரோதிகள் மனிதர்கள் அனைவருக்குமே விரோதிகள் தான். முஸ்லிம் பெண்கள் காலக்கட்டத்தின் சவால்களை புரிந்துக்கொண்டு களமிறங்கவேண்டும்." இவ்வாறு ரிட்லி உரையாற்றினார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அவதூறு பிரச்சாரங்களுக்கு மத்தியிலும் இஸ்லாத்தின் நற்செய்தி அடையாளம் காணப்படும்:யுவான் ரிட்லி"

கருத்துரையிடுக