ஹைதராபாத்:மறைந்த ஆந்திர பிரதேச முதல்வர் ஒய்.ராஜசேகர ரெட்டியின் மரணத்தின் பின்னணியில் இந்தியாவின் பணமுதலைகளான அம்பானி சகோதரர்களின் பங்குண்டு என்று ரஷ்ய நாட்டின் இணையதளமான எக்ஸெல்ட் ஆன்லைன் செய்தி வெளியிட்டது.
இதனை ஒளிபரப்புச்செய்த டிவி-5 மற்றும் சில தொலைக்காட்சி சேனல்கள் இதுபற்றிய விவாதங்களையும் சர்ச்சைகளையும் ஏற்பாடுச்செய்தது விவாதத்தை கிளப்பியது.
இச்செய்தியை வெளியிட்டதைத் தொடர்ந்து தொலைக்காட்சி சேனலுக்கெதிராக போலீஸ் வழக்குப் பதிவுச்செய்தது.
செய்தி வெளியானதைத் தொடர்ந்து ரெட்டியின் ஆதரவாளர்கள் ரிலையன்ஸ் ஸ்டோர்கள் மற்றும் அம்பானிக்களின் நிறுவனங்களுக்கெதிராக தாக்குதல் நடத்தினர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஒய்.எஸ்.ஆர் மரணத்தின் பின்னணியில் அம்பானி சகோதரர்களுக்கு பங்குள்ளதாக ரஷ்ய இணையதளம் செய்தி வெளியீடு"
கருத்துரையிடுக