புதுடெல்லி:தடைச் செய்யப்பட்ட அமைப்பான இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கம்(SIMI) சட்டவிரோத நடவடிக்கைகள் ஒன்றிலும் ஈடுபட்டதில்லை என்றும் தடையை நீக்குவதற்கான சட்டரீதியான போராட்டத்தில் தாங்கள் ஈடுபட்டுள்ளதாகவும் சிமியின் முன்னாள் தலைவர் ஷாஹித் பத்ர், ஸலாஹி அஃப்காரே மில்லி என்ற உருது மாத இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசியல் சட்டத்தில் நம்பிக்கை வைத்துள்ளதால் தான் சட்டரீதியான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக "சிமி இந்திய அரசியல் சட்டத்தை நம்புவதில்லை என்ற பிரச்சாரம் செய்யப்படுகிறதே" என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் ஷாஹித் பத்ரு இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் குண்டுவெடிப்புகளுக்கு சிமிதான் காரணம் என குற்றஞ் சாட்டப்படுகிறதே என்ற கேள்விக்கு இவ்வாறு பதிலளிக்கையில் "இறைத்தூதரின் வழிமுறையை பின்பற்றித் தான் தாங்கள் கிலாஃபத்(உலகளாவிய தலைமைத்துவம்) குறித்து பேசினோம். 'எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் நீதியையும் நியாயத்தையும் நடைமுறைப்படுத்திய அபூபக்கர், உமர் ஆகிய கலீஃபாக்களின் ஆட்சியை இந்தியாவில் கொண்டுவருவேன்' என்று ஒருமுறை காந்திஜி கூட கூறியுள்ளார்.
படிப்படியாகத்தான் சிந்தனை ரீதியான மாற்றத்தின் வழியாகத்தான் அதனை நடைமுறைப்படுத்த முடியுமே தவிர பலம் பிரயோகித்தோ அல்லது நிர்ப்பந்தத்தினாலோ அதனை செயல்படுத்த முடியாது. எவரேனும் ராம ராஜ்ஜியத்தைக் கொண்டுவருவதைக் குறித்தோ, கம்யூனிசத்தைக் கொண்டுவருதைக் குறித்தோ பேசும்பொழுது இந்த நாடு அதனை ஏற்றுக்கொள்கிறது. ஆனால் எங்களை மட்டும் குற்றவாளிகளாக கருதுகின்றார்கள்.
இந்தியாவில் நடைபெறும் குண்டுவெடிப்புகளை எவருடைய தலையிலும் வைத்து சுமத்துவதற்கு முன்பு அந்த குண்டுவெடிப்பினால் எவருக்கு லாபம் என்பதைக் குறித்து தீவிர ஆய்வை மேற்க்கொள்ள வேண்டும்" எனவும் ஷாஹித் பத்ர் தெரிவித்தார்.
தாங்கள் மத நல்லிணக்கத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்களென்றும், பலத்தை பிரயோகிக்காமல் போதனைகளில் நம்பிக்கைக் கொண்டவர்களென்றும் ஷாஹித் பத்ர் தெளிவுப்படுத்தினார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "சிமி சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை: முன்னாள் தலைவர் பேட்டி"
கருத்துரையிடுக