துபை:நேற்று முன் தினம் துபை போலீஸ் ஹமாஸ் தலைவர் மப்ஹூஹ் கொலையாளிகளைப் பற்றிய வீடியோ காட்சிகளை வெளியிட்டதைத் தொடர்ந்து இவ்வழக்கு புதிய திசை நோக்கிச் செல்கிறது.
வீடியோ காட்சிகள் மூலம் கண்டறியப்பட்ட 11 பேரில் பிரான்சைச் சார்ந்தவர் தவிர மற்ற அனைவரும் போலி பாஸ்போர்ட்டுகளில் பயணம் செய்துள்ளனர். இவர்களின் உண்மையான நாடு எது என்பது குறித்து குழப்பம் தொடர்கிறது. குற்றவாளிகளின் பெயர் கொண்ட ஏழுபேர் தற்ப்பொழுது இஸ்ரேலில் வசித்துவருவதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் இவர்கள் இக்குற்றத்தை செய்யவில்லை எனக் கூறுகின்றனர்.
பிரிட்டீஷ் பாஸ்போர்ட்டில் பயணம் செய்தவர்களில் ஆறுபேர் போலி முகவரியிலான பாஸ்போர்ட்டை பயன்படுத்தியுள்ளனர். பெயரும் நம்பரையும் மாற்றாமல் புகைப்படத்தை மாற்றியுள்ளனர். இவர்களுக்கு ஒருமாதம் முன்பு பாஸ்போர்ட் வழங்கப்பட்டதாக பிரிட்டன் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் இவர்களில் ஏழுபேர் தற்ப்பொழுது இஸ்ரேலில் வசிக்கின்றனர். தங்களுக்கு இக்குற்றத்தில் பங்கில்லை என அவர்கள் ராயிட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளனர்.
அதே வேளையில் இக்கொலையை செய்தவர்கள் மொஸாத் தான் என்று ஹமாஸின் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் வலுவடைந்து வருகிறது. ஐரோப்பிய நாடுகளின் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி துபைக்கு வந்த இவர்கள் பின்னர் இஸ்ரேலுக்கு சென்றுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இவ்விவகாரத்தில் இஸ்ரேல் அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை.
ஆனால் பிரிட்டீஷ் பாஸ்போர்ட்டை போலியாக பயன்படுத்தியதைக் குறித்து விசாரணை நடத்தப்போவதாக பிரிட்டீஷ் பிரதமர் அறிவித்ததாக சி.என்.என் கூறுகிறது. இஸ்ரேல் குடிமகன்கள் பிரிட்டீஷ் பாஸ்போர்ட்டுகளை பயன்படுத்தியதாக கண்டறிந்தால் தூதரக உறவில் அது இன்னொரு பிரச்சனைக்கு காரணமாகும் என தெரிகிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஹமாஸ் தலைவர் கொலை வழக்கு: குற்றவாளிகளில் ஏழுபேர் வசிப்பது இஸ்ரேலில்"
கருத்துரையிடுக