26 பிப்., 2010

கேரளா:RSS நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட கொல்லம் மேயர் ராஜினாமா மேலும் மார்சிஸ்ட் கட்சியிலிருந்தும் சஸ்பெண்ட்

கொல்லம் நகர மேயராக இருப்பவர் பத்மலோசனன். மார்க்சிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவாரான இவர் சி.ஐ.டி.யு. மாநில செயலாளராகவும் இருந்து வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இச்சம்பவம் மார்க்சிஸ்ட் கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

பத்மலோசனன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்சியினர் கருத்து தெரிவித்தனர். ஆனால் மேயர் என்ற முறையில் தான் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும், இதற்கு கட்சியின் அனுமதி தேவையில்லை என்றும் பத்மலோசனன் கூறினார்.

இந்நிலையில் கொல்லம் மாவட்ட மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் கொல்லம் மேயர் பத்மலோசனனும் கலந்துகொண்டார். கூட்டத்தில், கட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தும் விதத்தில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பத்மலோசனனை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று பெரும்பாலான உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர். அப்போது பத்மலோசனன், "நான் செய்தது தவறுதான்" என்று தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். ஆனாலும் அவரை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்வது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். தொடர்ந்து கொல்லம் மாநகராட்சி செயலாளருக்கு தனது உதவியாளர் மூலம் ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்தார். ஆனால் மரபுபடி ராஜினாமா கடிதத்தை மேயர்தான் நேரில் தரவேண்டும் என்று கூறி செயலாளர் அந்த ராஜினாமா கடிதத்தை ஏற்க மறுத்துவிட்டார். இச்சம்பவம் கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
source:dinakaran

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கேரளா:RSS நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட கொல்லம் மேயர் ராஜினாமா மேலும் மார்சிஸ்ட் கட்சியிலிருந்தும் சஸ்பெண்ட்"

கருத்துரையிடுக