தெஹ்ரான்:ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிப்புச் செய்யவும், தீவிரவாதத்திற்கெதிரான போர் என்ற பெயரில் அத்துமீறல்களுக் கெதிராகவும்தான் செப்டம்பர் 11 தாக்குதல் நடத்தப்பட்டது என ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மத் நிஜாத் கூறியுள்ளார்.
இஸ்ரேலியர்களால் உருவாக்கப்பட்ட முதலாளித்துவம் அழிவின் விழிம்பில் உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
2001 ஆம் ஆண்டு உலக வர்த்தக மையம் அமைந்த இரட்டைக் கோபுரங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் உளவுத்துறையின் உதவியுடன் உருவாக்கப்பட்டது. தீவிரவாதத்திற்கு எதிரான என்ற பெயரிலான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு துவக்கம் குறித்தது அத்தாக்குதல்.
அபகரிப்பு, பீதிவயப்படுத்துதல், மனிதநேயத்தைக் கொலைச் செய்தல் ஆகியவைதான் முதலாளித்துவ கொள்கையின் பலாபலன்கள். மனித உரிமை என்ற பெயரில் அவர்கள் உலகில் பயங்கரவாதத்தையும், கொடூரக் கொலைகளையும் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால் இஸ்லாமியப் புரட்சியின் முன்னேற்றத்தால் உலகியல் வாதத்திற்கு சவால் விடப்பட்டு மார்க்சிசம் தகர்க்கப்பட்டது என நிஜாத் கூறினார்.
ஜுன்துல்லா தலைவர் அப்துல்மாலிக் ரிகியை ஈரான் உளவுத்துறை கைது செய்தது அமெரிக்காவையும், பிரிட்டன் மற்றும் இஸ்ரேலையும் கடும் நிராசைக்குள்ளாக்கியதாக அஹ்மத் நிஜாத் தெரிவித்தார்.
கடந்த மாதம் பிப்ரவரி 23 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கிர்கிஸ்தானுக்கு செல்லும் வழியில் ஈரானின் துறைமுக நகரான பந்தர் அப்பாஸில் வைத்து விமானத்திலிருந்து இறக்கப்பட்டு கைதுச் செய்யப்பட்டார் ரிகி. கைதுச் செய்யப்படுவதற்கு 24 மணி நேரங்களுக்கு முன்னால் அவர் ஒரு அமெரிக்க முகாமிலிருந்தார் என ஈரானின் உளவுத்துறை அதிகாரி ஹைதர் முஸ்லிஹி தெரிவித்திருந்தார்.
ஈரான் அணுஆயுதம் மற்றும் அதுத் தொடர்பான சோதனைகளில் மேன்மேலும் முன்னேற்றம் அடைந்து வரும் நிலையில் ஈரான் மீது மேலும் பல பொருளாதாரத் தடைகள் விதிப்பது குறித்து அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் ஆலோசித்து வரும் நிலையில் அஹமத் நிஜாத்தின் இந்தப் பேச்சு மேலும் அமெரிக்காவைச் கோபமடையச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
9/11 தொடர்பான அமெரிக்காவின் விளக்கங்களை கேள்விக்குட்படுத்தி வந்த அஹமத் நிஜாத் அவை அனைத்தையும் முழுப்பொய் என தற்போது வர்ணித்துள்ளார்.
கடந்த 2007 ஆம் ஆண்டு நியூயார்க் நகருக்கு ஐநாவில் உரையாற்றச் சென்ற போது அஹமத் நிஜாத் இரட்டைக் கோபுரத் தாக்குதல் நடந்த இடத்தைப் பார்வையிட முயன்ற போது அமெரிக்கா அவருக்கு அனுமதி மறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
புவிச்சூடேற்றம், உலகப் பொருளாதார நெருக்கடி உள்பட உலகின் பல பிரச்னைகளுக்கு அமெரிக்கா தான் ஊற்றாக இருந்தாலும், உலகின் பிற நாடுகள் அதற்கான சுமையைச் சுமக்க வேண்டி இருப்பது பரிதாபமான சூழலாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்,times of india
0 கருத்துகள்: on "9/11 தாக்குதல் ஒரு நாடகம்: ஈரான் அதிபர் அஹ்மத் நிஜாத்"
கருத்துரையிடுக