25 மார்., 2010

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 7000 நர்சுகளுக்கு வேலை வாய்ப்பு

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பணிபுரிவதற்கு 7,000 நர்ஸ்கள் தேவைப்படுகின்றனர்.​ நர்ஸ் பற்றாக்குறை நிலவுவதால், இந்த நியமனம் அவசர கதியில் மேற்கொள்ளப்படுகிறது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஐக்கிய அரபுக் குடியரசு அறிவித்துள்ளது.

ஐக்கிய அரபு குடியரசில் தற்போது 23,000 நர்ஸ்கள் பணியாற்றுகின்றனர். இந்த எண்ணிக்கையை 30000 ஆக உயர்த்தும் நோக்கில் புதிதாக 7000 நர்சுகள் பணியமர்த்தப்பட உள்ளனர்.

குறைவான ஊதியம்,​​ குறைவான சமூக அந்தஸ்து மற்றும் குறிப்பிட்ட வரம்பிற்குட்பட்ட பணி உயர்வுகள் போன்றவையே நர்ஸ்கள் குறைபாடு ஏற்படுவதற்கு முக்கிய காரணம்.​ ​ முறையான பணி நடைமுறைகள் இல்லாமல் இருப்பதும்,​​ இந்த எண்ணிக்கை குறைவுக்கு காரணம் என ஐக்கிய அரபு அமீரக சுகாதார அமைச்சகத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.​

இக்குறைபாடுகளை சரி செய்யும் பொருட்டு,​​ வரும் 2015-க்குள் இதற்கென தனி அமைப்பு ஏற்படுத்தப்பட்டு,​​ அதன் மூலம் அனைவருக்கும் பொதுவான விதிமுறைகள் ஏற்படுத்தப்பட உள்ளது. நல்ல சம்பளம், நல்ல சமூக அந்தஸ்து தரும் வகையிலான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
source:thatstamil

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 7000 நர்சுகளுக்கு வேலை வாய்ப்பு"

கருத்துரையிடுக