லாகூர்:"அமெரிக்காவின் குடியேற்ற நாடாக பாகிஸ்தான் மாறி வருகிறது" என, முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்ஸாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது:"பாக்.அதிபர் ஆசிப் அலி சர்தாரி பாகிஸ்தானில் அமெரிக்காவின் கொள்கைகளை செயல்படுத்தி வருகிறார். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத்திலும் இதே நிலைதான் தொடர்கிறது. இதன் மூலம், பாகிஸ்தான், அமெரிக்காவின் குடியேற்ற நாடாக மாறி வருகிறது.எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் பாகிஸ்தானை இஸ்லாம் நலம் பேணும் நாடாக மாற்றுவோம்". இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
dinamalar
0 கருத்துகள்: on "அமெரிக்காவின் குடியேற்ற நாடாக பாகிஸ்தான் மாறி வருகிறது: இம்ரான் கான் குற்றச்சாட்டு"
கருத்துரையிடுக