புதுடெல்லி:முன்னாள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர் இஹ்ஸான் ஸாப்ரி. கடந்த 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் குஜராத்தில் மோடித் தலைமையிலான ஹிந்துத்துவா பாசிஸ்டுகள் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொடூரமாக இனப்படுகொலைச் செய்த நேரத்தில் குல்பர்கா சொசைட்டி காலணியில் உயிரைக் காப்பாற்ற அபயம் தேடி இஹ்ஸான் ஸாப்ரியின் வீட்டிற்கு சென்று நுழைந்தனர் 200 முஸ்லிம்கள்.
இவர்களை நரவேட்டையாட வெறியுடன் வீட்டினுள் நுழைந்த ஹிந்துத்துவா தீவிரவாதிகள் அபயம் தேடிய 70 முஸ்லிம்களை கொடூரமாக கொன்று குவித்தனர். இதனைத் தடுக்க முயன்ற இஹ்ஸான் ஸாப்ரியை கண்டந்துண்டமாக வெட்டி உயிரோடு தீவைத்துக் கொழுத்தினர்.
தான் கொல்லப்படுவதற்கு முன்பு இஹ்ஸான் ஸாப்ரி நரேந்திரமோடி உள்ளிட்ட அரசியல்வாதிகளையும், காவல்துறையினரையும் தொலைபேசி மூலம் அழைத்து உதவி தேடிய பொழுது எவரும் உதவிச்செய்ய முன் வரவில்லை.
இந்நிலையில் குஜராத்தில் நடந்த இனப்படுகொலையில் உயிர் தப்பிய இஹ்ஸான் ஸாப்ரியின் மனைவி ஸாகியா சுப்ரீம் கோர்ட்டில் புகார் மனு ஒன்றை பதிவுச் செய்தார்.
அதில் அவர் கூறிய குற்றச்சாட்டுகள்: "முஸ்லிம்களை ஒட்டுமொத்தமாக இனப்படுகொலைச் செய்ய குஜராத் முதல்வர் நரேந்திரமோடியும், அமைச்சர்களும் சதித் திட்டம் தீட்டியுள்ளனர். முஸ்லிம்கள் மீது தாக்குதல் தொடுக்கப்படும் பொழுது எவரும் அதனை தடுக்க தலையிடக்கூடாது என காவல்துறை அதிகாரிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் மோடியும் கூட்டாளிகளும் உத்தரவு பிறப்பித்திருந்தார்கள்.
2002 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 முதல் நரேந்திர மோடி நடத்திய கூட்டங்களின் ஆவணங்கள் காணாமல் போனது எவ்வாறு?
கோத்ரா ரெயில் பெட்டி தீவைக்கப்பட்டதில் கொல்லப்பட்ட உடல்களை அஹ்மதாபாத் தெருக்களின் வழியாக ஊர்வலமாக கொண்டுச் செல்ல அனுமதித்தது ஏன்?
பிப்ரவரி 27 ஆம் நாள் சங்க்பரிவார் அழைப்பு விடுத்த முழு அடைப்பை ஏன் தடுக்கவில்லை?
அதிகாலை 9.30முதல் குல்பர்கா சொசைட்டி காலனியில் வன்முறையாளர்கள் ஒன்றுக் கூடியிருந்தனர். அப்பொழுதே ஜாஃப்ரி காவல்துறையை அழைத்து உதவி தேடினார்.
இதற்கிடையே ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பயந்து 200 க்கு மேற்பட்ட முஸ்லிம்கள் ஜாஃப்ரியின் வீட்டில் அபயம் தேடினர். அப்பொழுது ஜாஃப்ரி மோடியை அழைத்து உதவிக் கோரினார். மாலையில் ஜாஃப்ரியும், 70 முஸ்லிம்களும் கொடூரமாக கொல்லப்படுகிறார்கள்." இவ்வாறு ஸாகியா ஜாஃப்ரி புகார் மனுவில் சுட்டிக் காட்டுகிறார்.
இவருடைய புகாரைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழு 9 வழக்குகளை பதிவுச் செய்தது.
இவ்விசாரணையின் இறுதியாக குஜராத் இனப்படுகொலைக்குக் காரணமான நரேந்திரமோடி இம்மாதம் 21 ஆம் தேதி விசாரணையின் போது ஆஜராக முன்னாள் சி.பி.ஐ இயக்குநர் ஆர்.கே.ராகவன் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழு சம்மன் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.
மோடியை விசாரணைச் செய்து முடித்தால் புலனாய்வு விசாரணை நிறைவடையும் என்று ஆர்.கே.ராகவன் தெரிவித்தார். ஸாகியா அளித்த புகாரில் 62 அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டிருந்தார்.
ஸாகியா அளித்த புகாரில் ஏராளமான குற்றச்சாட்டுகளும், நிறைய நபர்களின் பெயரும் குறிப்பிட்டிருந்தார். இவற்றையெல்லாம் புலன் விசாரணைச் செய்து முடித்துள்ளதாகவும், இனி மோடி மட்டுமே மீதமுள்ளதாகவும் அவ்விசாரணையும் முடிவடைந்தால் எல்லா ஆதாரங்களையும் ஒன்றிணைத்து அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்ச் செய்யப்படும் என்று ஆர்.கே.ராகவன் தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "குஜராத் இனப்படுகொலை:புலனாய்வுக்குழு முன் விசாரணைக்கு ஆஜராக மோடிக்கு சம்மன்"
கருத்துரையிடுக