பால் தாக்கரே தலைமையிலான சிவசேனா மற்றும் அவருடைய மருமகன் ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா ஆகிய கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி சமர்பிக்கப்பட்ட மனுவை ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கூறி உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.
சிவசேனா மற்றும் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா ஆகிய கட்சிகள் மாநில அடிப்படையிலும் மத அடிப்படையிலும் மக்களைப் பிரிப்பதாகவும் அவற்றின் இத்தகைய செயல்பாடுகள் தேசிய ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் ஆகவே அக்கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி மனோஜ் பண்டிட் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
இம்மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டது. மேலும், "இதுதொடர்பாக இந்திய தேர்தல் கமிஷனையோ, மாநில தேர்தல் கமிஷனையோ அணுகுமாறு" மனுதாரர் மனோஜ் பண்டிட்டிற்குச் சிபாரிசு செய்தது.இதனைத் தொடர்ந்து நீதிமன்ற அனுமதியுடன் மனுதாரர் மனோஜ் பண்டிட் தன் மனுவை வாபஸ் பெற்றார்.
0 கருத்துகள்: on "சேனா கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு!"
கருத்துரையிடுக