படத்தைப் பார்த்தால், 'காஞ்சிபுரம் தேவநாத குருக்கள் விவகாரம் போலவோ' என்ற அலறல் எழுவது நியாயமே! ஆனால், இது கோவை மாவட்டத்தின் கடைக்கோடியில் அமைந்திருக்கும் மலையோர கிராமமான குப்பனூர் கோயில் திருவிழாவில், பலர் பார்க்க 'பாரம்பரிய தாசர்கள்' அரங்கேற்றும் பக்திக் காட்சி!
வருடந்தோறும் மாசி மகத்தன்று கோயில்களில் வழிபாடு நடத்திய பின்னர், 'கவாள வீதியுலா' நடைபெறுவது வழக்கம். சாமியாடியபடி வீதியுலா வரும் பாரம்பரிய தாசர்கள், வாழைப்பழங்களை தங்களது வாயில் கவ்விக் கொள்கிறார்கள். அப்போது அவர்களுக்கு முன்னால் மண்டியிடுகிறார்கள் பெண் பக்தைகள். திடீரென ஆக்ரோஷமாக சாமியாடும் தாசர்கள், வாயில் கவ்வி வைத்திருக்கும் வாழைப்பழத்தை, அந்தப் பெண் பக்தைகளின் வாயில் திணிக் கிறார்கள். சுற்றிலும் வேடிக்கை பார்த்தபடி நிற்கும் பொதுமக்கள், படபடவென கன்னத்தில் போட்டுக் கொள்கிறார்கள். இந்த மாதிரி தாசர்களிடம் இருந்து பழம் பெறும் பெண்கள் பெரும்பாலும் குழந்தை வரம் கேட்டு வருபவர்களாம். இந்தப் பழப் பரிமாற்றத்துக்குப் பிறகு பலருக்கு குழந்தை பிறந்துள்ளதாக அந்த ஏரியாவாசிகள் சொல்கிறார்கள்!
6 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் காரமடை அரங்கநாதர் கோயில் திருவிழாவிலும், இந்த கவாள வீதி உலா நடந்திருக்கிறது. பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக, அங்கு கவாளம் கொடுப்பது நிறுத்தப்பட்டு, குப்பனூர் அளவில் சுருங்கிவிட்டது!
source:ஜூனியர் விகடன்
1 கருத்துகள்: on "ஆ'சாமி' திருந்தமாட்டோம்ல!!"
சகோதரா!இதில் இடம்பெற்றுள்ள படத்தை மாற்றுங்கள் ஆபாசமாக உள்ளது.
கருத்துரையிடுக