துபாய்:ஹமாஸ் தலைவர்களின் ஒருவரான மஹ்மூத் மப்ஹூஹ் துபாயில் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய கொலையாளிகள் 27 பேர்களில் இருவர் அமெரிக்காவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக நேற்று முன்தினம் வால்ஸ்ட்ரீட் ஜர்னல் என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் மப்ஹுஹ் கொலை விசாரணை நடந்துக் கொண்டிருக்கும் வேளையில் குற்றவாளிகளின் அமெரிக்கர்களுடனான தொடர்பு குறித்து விசாரிக்குமாறு அமெரிக்க புலனாய்வு ஏஜன்சியான எஃப்.பி.ஐக்கு யு.ஏ.இ போலீஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
தி நேசனல் என்ற துபாயிலிருந்து வெளிவரும் நாளிதழ் நேற்று வெளியிட்ட செய்தியில் மப்ஹூஹ் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளில் 13 பேர் அமெரிக்காவிலுள்ள வங்கியின் க்ரெடிட் கார்டுகளை பயன்படுத்தியுள்ளனர் என்று கூறியிருந்தது. 27 குற்றவாளிகளில் 13 பேர் அமெரிக்காவின் உள்ளூர் வங்கியான மீட்டா(meta)விடமிருந்து பெறப்பட்ட முன்னரே பணம் செலுத்தப்பட்ட(prepaid) மாஸ்டர் க்ரெட் கார்டு மூலமாகத்தான் விமான டிக்கெட் வாங்கவும், ஹோட்டலில் அறையை புக் செய்யவும் பயன்படுத்தியுள்ளனர்.
ஆனால் இச்செய்தியைக் குறித்து அமெரிக்க அரசுத்துறையும், இண்டர்போலும் நழுவுகின்றன. துபாய் போலீஸ் தலைவர் தாஹி கல்ஃபான் தமீமி அபுதாபியில் நடைபெற்ற சர்வதேச பாதுகாப்புத் தொடர்பான தேசிய மீட்பாய்வு மாநாட்டில் குறிப்பிடும் பொழுது அமெரிக்கா இவ்விசாரணையில் பங்கேற்குமா என்பது குறித்து உறுதிச்செய்யவில்லை.
அமெரிக்கா பல ஆண்டுகளாக இஸ்ரேலிய பயங்கரவாதத்திற்கு முழுமையான ஆதரவை தெரிவித்துவரும் நாடாகும்.
செய்தி:presstv
0 கருத்துகள்: on "மப்ஹூஹ் கொலை: குற்றவாளிகளுக்கு அமெரிக்காவுடனான தொடர்பைக் குறித்து விசாரிக்க எஃப்.பி.ஐயிடம் துபாய் கோரிக்கை"
கருத்துரையிடுக