அஹ்மதாபாத்:அஹ்மதாபாத்திலிலுள்ள பாபுநகர் லால்பகதூர் ஸ்டேடியத்திற்கு அருகிலிலுள்ள குப்பைத் தொட்டியில் கிடந்த 14 குறைமாதக் குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டன.
துப்புரவுத் தொழிலாளி ஒருவர் காலை நேரத்தில் துப்புரவுச் செய்யும் பொழுது குப்பைத் தொட்டியில் இரண்டு பெட்டிகள் கிடப்பதைக் கண்டார். இதனை திறந்துப் பார்த்தபொழுது ஒன்றில் பதப்படுத்தப்பட்ட விந்துவும் இன்னொன்றில் 3 மாத கால அளவிலான குழந்தைகளின் உடல்களும் இருப்பதைக் கண்டார்.
இதனைத் தொடர்ந்து அவர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். இதுத்தொடர்பாக பாபுநகர் போலீஸ் ஆய்வாளர் ஆர்.டி.லஷ்காரி பி.டி.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "14 குறைமாதக் குழந்தைகளின் உடல்கள் குப்பைத் தொட்டியிலிருந்து மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது." என்றார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,"இறந்துபோன குழந்தைகளின் பாலினம் பிரேத பரிசோதனையில் கண்டறியப்பட்ட பின்னர் இதுத்தொடர்பாக வழக்கு பதிவுச் செய்யப்படும்". என்றார்.
இப்பகுதியில் செயல்பட்டு வந்த நர்ஸிங் ஹோம் 3 மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது. அந்த நர்ஸிங் ஹோமிலிருந்து இக்குறைமாதக் குழந்தைகள் வீசப்பட்டிருக்கலாம் எனத்தெரிகிறது.
source:dnaindia.com

0 கருத்துகள்: on "குஜராத்:குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட 14 குறைமாதக் குழந்தைகளின் உடல்கள் மீட்பு"
கருத்துரையிடுக