7 ஏப்., 2010

ஷார்ஜாவில் 17 இந்தியர்களுக்கு மரண தண்டனை: இன்று மேல் முறையீடு

ஷார்ஜா: ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஷார்ஜாவில் பாகிஸ்தானியரை கொலை செய்ததாக ​ ​ 17 இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து இன்று(புதன்கிழமை) மேல் முறையீடு செய்யப்பட உள்ளது. இதற்கான நடவடிக்கையை இந்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது.​

தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்தியர்கள் சார்பில் முகமது சல்மான் என்பவர் வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானியரை கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள 17 இந்தியர்கள் மீது கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் மரண தண்டனை விதிக்கப்பட்டது.​ இதை எதிர்த்து மேல் முறையீடு செய்வதற்கான இரண்டு கால அவகாசம் முடிவடைய உள்ளது.​ இதுதொடர்பாக தண்டனைக்குள்ளான இந்தியர்களின் உறவினர்கள் மத்திய அரசை வலியுறுத்தியதைத் தொடர்ந்து இந்த வழக்கில் மேல் முறையீடு செய்யப்படுகிறது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஷார்ஜாவில் 17 இந்தியர்களுக்கு மரண தண்டனை: இன்று மேல் முறையீடு"

கருத்துரையிடுக