29 ஏப்., 2010

மால்கம் எக்ஸ் கொலையாளியை பரோலில் விடுதலைச் செய்தது நீதிமன்றம்

வாஷிங்டன்:அமெரிக்காவில் மனித உரிமை சேவகராகவும் நேசன் ஆஃப் இஸ்லாமின் தலைவராகவுமிருந்த மால்கம் எக்ஸ் என்ற மாலிக் அல் ஸாபாஸைக் கொன்ற கொலையாளியை 45ஆண்டுகளுக்கு பின்னர் நீதிமன்றம் பரோலில் விடுதலைச் செய்தது.

1965 ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் மால்கம் எக்ஸை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட தாமஸ் ஹகேன் என்பவரைத்தான் நீதிமன்றம் நிபந்தனைகளின் அடிப்படையில் குடும்பத்தினருடன் வாழ விடுதலைச் செய்துள்ளது.

ஹகேனுக்கு 22 வயதான காலக்கட்டத்தில்தான் மால்கம் எக்ஸை தனிப்பட்ட விரோதம் காரணமாக கொன்றார் என குற்றஞ் சாட்டப்படுகிறது. இதற்கு உதவிய முஹம்மது அப்துல் அஸீஸையும், காலித் இஸ்லாமினுக்கும் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தது.

கறுப்பு நிற மக்களின் வாழ்வில் வசந்தம் இஸ்லாமின் மூலமே சாத்தியம் என்பதை பிரச்சாரம் செய்த மால்கம் எக்ஸ் நேசன் ஆஃப் இஸ்லாம் என்ற இஸ்லாமிய அமைப்பின் தலைவராவார். இவர் ஒரு மனித உரிமைப் போராளியாவார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மால்கம் எக்ஸ் கொலையாளியை பரோலில் விடுதலைச் செய்தது நீதிமன்றம்"

கருத்துரையிடுக