நிலம்பூர்(கேரளா):சாட்டிங்(இணையதள அரட்டை) மூலம் சீனாவைச் சார்ந்த யூனினிடம் உள்ளத்தை பறிக்கொடுத்த கேரள வாலிபர் ஜாஸிம் அவரை கடந்த சனிக்கிழமை திருமணம் முடித்தார். யூனின் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு தனது பெயரை ஜாஸ்மின் என மாற்றிக்கொண்டார். ஜாஸ்மின் காதுகேட்காத, வாய்பேசமுடியாத பெண்மணியாவார்.
சாட்டிங் மூலம் கடல் கடந்து காதலை வளர்த்துக் கொண்ட ஜாஸ்மின் கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி ஜாஸிமுக்கு விபத்து ஏற்பட்டதை கேள்விப்பட்டு உடனடியாக சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வந்தார். பின்னர் அவர்களின் திருமணம் உற்றாரும் உறவினரும் சூழ எளிமையான முறையில் நடந்தேறியது.
ஜாஸ்மினுக்கு பாதுகாவலர் எவரும் இங்கு இல்லாததால் அவ்வூர் இமாம் பாதுகாவலராக பொறுப்பேற்றுக் கொண்டார். ஜாஸ்மின் தனது திருமணத்திற்கான அனுமதியை இணையதளம் வழியாக தனது வீட்டிலிருந்து பெற்றுக்கொண்டார். அவருடைய விசா வருகிற 29 ஆம் தேதி முடிவடைவதால் அதன் காலக்கட்டத்தை நீட்டிக்கொடுக்க அதிகாரிகள் முடிவுச்செய்துள்ளனர்.
செய்தி:மாத்யமம்

0 கருத்துகள்: on "சாட்டிங்:சீனப்பெண்ணை திருமணம் முடித்த கேரள வாலிபர்"
கருத்துரையிடுக