சிட்னி:ஹமாஸ் தலைவர் மஹ்மூத் அல் மஹ்பூப் கொலை வழக்கில், ஆஸ்திரேலியாவின் போலி பாஸ்போர்ட்களை பயன்படுத்திய விவகாரத்தில், ஆஸ்திரேலியா போலீசார் துப்புத் துலங்காததையடுத்து, விசாரணையை உளவு நிறுவனங்களிடம் ஒப்படைத்துள்ளது ஆஸ்திரேலியா.
இது குறித்து,ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் தெரிவிக்கையில்; இஸ்ரேலின் உளவு நிறுவனமான மொஸாதை இக்கொலையில் சந்தேகப்படுவதையடுத்து, மேலும் சில தகவல்கள் தேவைப்படுவதினால் அதுகுறித்து துப்புத்துலங்க உளவு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். இது மிகவும் முக்கியமான விவகாரம். இதை உண்மையாகவும், பொறுமையாகவும் கையாள வேண்டும். ஆஸ்திரேலியா உளவுத் துறைகளும் இவ்விசாரணையில் அடங்கும். என்றார்.
இதுவரை, இக்கொலையில் குற்றம்சாட்டப்படுள்ள 4 குற்றவாளிகள் ஏற்கனவே மோசடி வழக்கில் சிக்கியவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த மாதம்,பிரிட்டன் தன் இஸ்ரேல் தூதரக அதிகாரியை வெளியேற்றியதையடுத்து, ஆஸ்திரேலியா இஸ்ரேல் தூதரக அதிகாரிகளை அழைத்து எச்சரித்திருந்தது.
ASIO (உள்நாட்டு உளவுத்துறை) மற்றும் ASIS (வெளிநாட்டு உளவுத்துறை) ஆகிய ஆஸ்திரேலிய உளவுத்துறைகளும், இவ்வழக்கின் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். இன்னும் சில விசாரணைகள் எஞ்சியுள்ளதென்றும். மேலும் ஆதாரங்கள் தேவைப்படுவதாகவும் இதற்கு பிறகு, அரசின் முடிவை அதிகார்வப்பூர்வமாக அறிவிப்போம் என்றும் ஸ்மித் தெரிவித்தார்.
source:Gulf news

0 கருத்துகள்: on "ஹமாஸ் தலைவர் கொலைக்கு போலி பாஸ்போர்ட்களை பயன்படுத்திய விவகாரம் - உளவு நிறுவனங்களை நாடும் ஆஸ்திரேலியா"
கருத்துரையிடுக