4 ஏப்., 2010

இளைஞர் ஒலிம்பிக்:பெண்கள் கால்பந்தாட்டப் போட்டியில் இஸ்லாமிய உடை அணிய FIFA தடை. எதிர்ப்புத் தெரிவிக்க ஈரான் அழைப்பு

டெஹ்ரான்:வருகிற ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதியிலிருந்து 26 வரை சிங்கப்பூரில் முதல் இளைஞர் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவிருக்கின்றன.

இதில் பெண்களுக்கான கால்பந்தாட்டப் போட்டியும் இடம் பெறுகிறது. இப்போட்டியில் ஆடுவதற்கு ஈரானின் பெண்கள் அணி தயாராக உள்ளது. ஈரான் கால்பந்தாட்ட வீராங்கனைகள் இஸ்லாமிய ஆடை அணிந்துதான் இப்போட்டியில் கலந்துக் கொள்ளவிருந்தனர்.

இந்நிலையில் சர்வதேச கால்பந்தாட்டக் கழகமான FIFA(Indernationale de Football Association) இஸ்லாமிய உடை அணிந்து ஆடுவதற்கு தடை விதித்துள்ளது.

இதுத் தொடர்பாக ஈரான் தேசிய ஒலிம்பிக் கமிட்டியின் அதிகாரியான பஹ்ராம் அஃப்ஸர்ஸாதே பார்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்தப்பேட்டியில், FIFA வின் இத்தடை உலக முஸ்லிம்களின் உரிமையை மீறுவதாகும். மேலும் இது பெண்களின் முன்னேற்றத்திற்கு போடப்படும் தடையாகும். இதுத் தொடர்பான கண்டனக்கடிதங்களின் நகல்களை சர்வதேச ஒலிம்பிக் கழகத்திற்கும், ஆசியா மற்றும் உலகின் பல்வேறு விளையாட்டுத்துறை அதிகாரிகளுக்கும் ஈரான் தேசிய ஒலிம்பிக் கழகம் அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
செய்தி:FARSNEWS

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இளைஞர் ஒலிம்பிக்:பெண்கள் கால்பந்தாட்டப் போட்டியில் இஸ்லாமிய உடை அணிய FIFA தடை. எதிர்ப்புத் தெரிவிக்க ஈரான் அழைப்பு"

கருத்துரையிடுக