5 மே, 2010

அஜ்மீர் குண்டுவெடிப்பு:சுவாமி அஸிமானந்தாவை தேடும் பணி துவங்கியது

அஹ்மதாபாத்:அஜ்மீர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய ஹிந்துத்துவா தீவிரவாதி சுவாமி அஸிமானந்தாவை ராஜஸ்தான் ஏ.டி.எஸ் குஜராத்தில் தேடத் துவங்கியுள்ளது.

தெற்கு குஜராத்தில் பழங்குடி மாவட்டமான டாங்க்ஸ் மையமாக வைத்து செயல்பட்டு வருபவர்தான் அஸிமானந்தா. அஜ்மீர் குண்டுவெடிப்புடன் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகளை விசாரித்ததில் அஸிமானந்தாவின் பங்கைக் குறித்த விபரம் போலீசாருக்கு கிடைத்தது.

அஸிமானந்தாவைத் தேடி ஏ.டி.எஸ் குழு குஜராத் டாங்க்ஸிற்கு சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ராஜஸ்தான் உள்துறை அமைச்சர் சாந்தி தரிவாலும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

சுபிர் கிராமத்தில் அஸிமானந்தாவின் தலைமையில் செயல்படும் சபரி கோயிலிலும், வனவாசி கல்யாண் பரிஷத் நடத்தும் வகாயிலிலுள்ள ஆசிரமத்திலும் ஏ.டி.எஸ் அவரைத் தேடி சோதனையிட்ட போதிலும் கண்டுபிடிக்க இயலவில்லை.

ஆர்.எஸ்.எஸ்ஸின் கீழ் செயல்படும் அமைப்புதான் வனவாசி கல்யாண் பரிஷத்.

கோயில் நிர்வாகி மான்சூக்கை ஆறு உறுப்பினர்களைக் கொண்ட ஏ.டி.எஸ் குழு விசாரித்தது. கடந்த சனிக்கிழமை வரை அஸிமானந்தா கோயிலில் இருந்தார் என கிராமவாசிகள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

2008 ஆம் ஆண்டு மலேகான் குண்டுவெடிப்புத் தொடர்பாக ஏ.டி.எஸ் தலைவர் மறைந்த ஹேமந்த் கர்காரே தலைமையில் சன்னியாசினி பிரக்யாசிங் தாக்கூரை கைது செய்தபொழுது அஸிமானந்தா தலைமறைவானார். பின்னர் வெளியே வந்த அஸிமானந்தா அஜ்மீர் குண்டுவெடிப்புத் தொடர்பாக ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் கைதுச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் தலைமறைவாகியுள்ளார்.

பிரக்யாசிங் தாக்கூரைப் போல் சங்க்பரிவார் வட்டாரங்களில் பிரபலமானவர் அஸிமானந்தா. 55 வயதுடைய அஸிமானந்தாவுக்கு சொந்த ஊர் மேற்குவங்காளத்தின் ஹூக்ளியாகும். இவரது உண்மையான பெயர் ஜதின் சாட்டர்ஜி. தீவிர இடதுசாரி சிந்தனையுடைய இவர் பின்னர் ராமகிருஷ்ணா மிஷனுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு செயல்பட ஆரம்பித்தார்.

தாவரவியலில் பட்ட மேற்படிப்பு பயின்றுள்ள இவர் தொன்னூறுகளின் கடைசியில் டாங்க்ஸில் வந்தடைந்தார். அப்பிரதேசத்தில் கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதில் இவர் முக்கிய பங்கு வகித்ததால் சங்க்பரிவார்கள் மத்தியில் பிரபலமானவர் இவர்.

அஜ்மீர் குண்டுவெடிப்புடன் தொடர்புடையவர் எனக்கருதி இந்தூரில் யுவமோர்ச்சா தலைவர் பிரணவ் மண்டலைக் குறித்தும் விசாரணை நடப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. போலீஸ் ஏற்கனவே இவரை விசாரித்திருந்தது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அஜ்மீர் குண்டுவெடிப்பு:சுவாமி அஸிமானந்தாவை தேடும் பணி துவங்கியது"

கருத்துரையிடுக