10 மே, 2010

பொருளாதர நெருக்கடியால் மூடப்படும் வளைகுடா நாளிதழ்கள்

வளைகுடாவின் மிகப் பிரபலமான அரபி நாளிதழ்கள் குவைத்தின் அவான் பத்திரிகையும் பஹ்ரைனிலிருந்து வெளிவரும் அல்-வக்த் பத்திரிகையும் பொருளாதார நெருக்கடியால் தங்கள் வெளியீட்டை நிறுத்தியுள்ளன.

கடந்த 30 மாதங்களாக குவைத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த அவான் நாளிதழ் கடந்த திங்கட்கிழமை தன் இறுதி வெளியிட்டை வெளியிட்டது. கடந்த ஓராண்டுக்குள் இன்னும் இரண்டு குவைத் நாளிதழ்கள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது. பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்ட இன்வெஸ்ட்மெண்ட் தார் எனும் முதலீட்டு நிறுவனத்துக்கு சொந்தமானது இந்நாளிதழ். தற்போது 14 அரபி மற்றும் 3 ஆங்கில தினசரிகள் குவைத்தில் வெளிவருகின்றன.

மார்ச் 2006-ல் இருந்து பஹ்ரைனிலிருந்து வெளிவரும் அல்-வக்த் தினசரியும் பொருளாதார பிரச்னையால் கடந்த செவ்வாயிலிருந்து நிறுத்தப்பட்டது. நடுநிலை தினசரியான அல்-வக்த் தன் அரசியல் புலனாய்வு கட்டுரைகளுக்காக 2007-லும் சுற்றுச்சூழல் குறித்த கட்டுரைகளுக்காக 2008-லும் அரபு பத்திரிகையியல் விருதுகள் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தன் இறுதி பதிப்பில் பொருளாதர சுமைகளை சுமக்க முன்வருமாறு பலமுறை அழைப்பு விடுக்கப்பட்டும் யாரும் முன்வராததால் நிறுத்தப்படுவதாகவும் "இந்நாட்டில் சுதந்திரமான, சுயேச்சையான, நீதி மிக்க தினசரியின் தேவை இன்னும் உணரப்படவில்லை" என்று தெரிவித்துள்ளது.
inneram

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பொருளாதர நெருக்கடியால் மூடப்படும் வளைகுடா நாளிதழ்கள்"

கருத்துரையிடுக