காஸ்ஸா:மேற்கு கரையில் வருகிற ஜூலை 11 ஆம் தேதி நடக்கவிருக்கும் நகராட்சித் தேர்தலை புறக்கணிக்க ஃபலஸ்தீன் போராளி இயக்கங்களான ஹமாஸும், இஸ்லாமிக் ஜிஹாதும் தீர்மானித்துள்ளன.
ஒருங்கிணைப்பிற்கான முயற்சி தோல்வியுற்ற சூழலில் நடக்கும் தேர்தல் ஃபலஸ்தீனர்களுக்கிடையே பிளவுகளை ஏற்படுத்தும் என இரு அமைப்புகளும் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளன.
தங்களுடைய உறுப்பினர்களை மேற்குகரையில் கைது செய்து சித்திரவதைச் செய்யும்பொழுது தேர்தலில் பங்குபெற இயலாது என அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
காஸ்ஸாவில் தேர்தல் நடத்துவதை ஹமாஸ் எதிர்த்ததைத் தொடர்ந்து அதிபர் மஹ்மூத் அப்பாஸின் ஃபத்ஹ் கட்சிக்கு பெரும்பான்மையுள்ள மேற்குகரையில் மட்டும் தேர்தல் நடத்த பிரதமர் ஸலாம் ஃபய்யாத் தீர்மானித்துள்ளார்.
இரு இயக்கங்களுக்கிடையே சமரசம் ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் வெற்றிப்பெறவில்லை.ஃபலஸ்தீனர்கள் ஒன்று சேர்ந்து தேர்தலை புறக்கணிப்பார்கள் என ஹமாஸ் கூறுகிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "ஹமாஸும்,இஸ்லாமிக் ஜிஹாதும் ஃபலஸ்தீன் தேர்தலை புறக்கணிக்கின்றன"
கருத்துரையிடுக