19 மே, 2010

ஈரான் அதி​பர் அகமதி நிஜாத்தை சந்தித்தார் வெளியுறவு அமைச்சர் எஸ்.​எம்.​கிருஷ்ணா

டெஹ்​ரான் ஈரான் அதி​பர் அகமதி நிஜாத்தை மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.​எம்.​கிருஷ்ணா செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேச்சுகள் நடத்தினார்.​ ​

ஜி-15 வளரும் நாடுகளின் உச்சி மாநாடு ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடைபெறுகிறது.​ இதில் இந்தியாவின் சார்பில் கலந்து கொள்ள வெளியுறவு அமைச்சர் எஸ்.​எம்.​கிருஷ்ணா டெஹ்ரான் சென்றுள்ளார்.​ அங்கு அவர் ஈரான் அதிபர் அகமது நிஜாத்தை சந்தித்துப் பேசினார்.​ இந்த சந்திப்பின் போது இரு தலைவர்களும் சுமார் 30 நிமிடங்கள் உரையாடினர்.

இருதரப்பு உறவுகள் குறித்தும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் தற்போது நிலவி வரும் சூழல் குறித்தும் இருவரும் பேச்சுகள் நடத்தினர்.​ இந்தியாவும் ஈரானும் எப்போதுமே தொடர்பில் இருக்க வேண்டும் என ஈரான் அதிபர் நிஜாத் விருப்பம் தெரிவித்தார்.​ ஜி-15 நாடுகள் அமைப்பிலும் அணி சேரா நாடுகள் கூட்டமைப்பிலும் இந்தியா முக்கிய பங்காற்றி இருப்பதாக பேச்சுகளின் போது அகமதி நிஜாத் குறிப்பிட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.​ ​

பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் ஆகியோருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் நிஜாத் எஸ்.எம்.​ கிருஷ்ணாவிடம் கூறினார்.​ இந்தியாவின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் பார்த்து மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் கூறினார்.​ ​ இந்த சந்திப்பின் போது எஸ்.​ எம்.​ கிருஷ்ணா,​​ தன்னை சிறப்பாக வரவேற்றதற்காக அகமதி நிஜாத்திடம் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

ஈரானுடன் இந்தியாவுக்கு உள்ள கலாசாரத் தொடர்புகள் குறித்தும் கிருஷ்ணா நினைவு கூர்ந்தார்.​ ஜி-15 உச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகளை ஈரான் சிறப்பாக செய்துள்ளதாகவும் எஸ்.எம்.​ கிருஷ்ணா பாராட்டுத் தெரிவித்தார்.

source:thatstamil


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஈரான் அதி​பர் அகமதி நிஜாத்தை சந்தித்தார் வெளியுறவு அமைச்சர் எஸ்.​எம்.​கிருஷ்ணா"

கருத்துரையிடுக