22 மே, 2010

மங்களூர் விமானவிபத்து:பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அனுதாபம்

மங்களூர்:மங்களூர் விமானநிலையத்தில் துபாயிலிருந்து சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ரன்வேயில் தகர்ந்து விழுந்து தீப்பிடித்த விபத்தில் 158 பேர் மரணமடைந்தனர்.

இக்கோர விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

இதுத்தொடர்பான செய்தியை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசியப் பொதுச்செயலாளர் கெ.எம்.ஷெரீஃப் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:
"விமானவிபத்தில் அங்கத்தினர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு எல்லாம் வல்ல இறைவன் பொறுமையையும், மன உறுதியையும் அளிக்க பிரார்த்திக்கிறோம். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா விமானவிபத்து மீட்புப் பணியில் முழுவீச்சில் ஒத்துழைக்கும்.

மங்களூர் பாஜ்பே விமானநிலையம் இதர விமானநிலையங்களுக்கு ஒப்பிடுகையில் மிக மோசமான தரத்தில் உள்ளது. இவ்விமானநிலையத்தின் பாதுகாப்புத் தரத்தை உயர்த்த அதிகாரிகள் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை என்பதை இந்த கோரமான விமானவிபத்து உணர்த்துகிறது.

மத்திய அரசு இவ்விபத்துக் குறித்து விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். மேலும் அதிகாரிகளின் மெத்தனப்போக்கு குறித்தும் விசாரணை மேற்கொள்ளவேண்டும்.

அதிகாரிகள் போதிய வசதிகளை செய்திருந்தால் இவ்விபத்தை தடுத்திருக்கலாம். மத்திய அரசு இம்மோசமான நிகழ்வுக்கு காரணமான அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்கவேண்டும்.

விபத்தில் உறவினரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தேவையான உதவிகளை வழங்கவேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோரிக்கை விடுக்கிறது". இவ்வாறு அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
செய்தி:twocircles.net

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மங்களூர் விமானவிபத்து:பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அனுதாபம்"

கருத்துரையிடுக