23 மே, 2010

முஸ்லிம்களுக்கு தொந்தரவு கொடுப்பதை கர்நாடகா போலீஸ் நிறுத்த வேண்டும்- பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

பெங்களூர்:வழக்கு விசாரணை என்ற பெயரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர்களை தொந்தரவுச் செய்வதை கர்நாடகா போலீஸ் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசியத் தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் வலியுறுத்தியுள்ளார்.

பா.ஜ.க அரசின் கீழ் செயல்படும் கர்நாடகா போலீஸ் தங்களுடைய அதிகாரத்தை ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கெதிராக பயன்படுத்துகிறது.

உண்மையிலேயெ சமூக நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஸ்ரீராம சேனா போன்ற மதவெறி பாசிச அமைப்புகளை எதிர்க்கொள்வதற்கு பதிலாக ஒவ்வொரு நாசகரச் சம்பவங்களுக்கும் முஸ்லிம்களை கர்நாடகா போலீஸ் வேட்டையாடுகிறது.

மதக்கலவரத்தை உருவாக்குவதில் ஸ்ரீராமசேனாவின் பங்குக் குறித்து ஒரு தொலைக்காட்சிச்சானல் ஆதாரத்துடன் செய்தியை வெளியிட்ட பிறகும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இயலாத போலீசின் செயல் வெட்ககேடானது.

ஐ.பி.எல் போட்டி நடைபெறும் ஸ்டேடியத்திற்கு அருகில் சமீபத்தில் நடந்த குண்டுவெடிப்பின் பெயரால் தற்பொழுது முஸ்லிம்களை கர்நாடகா போலீஸ் தொந்தரவுக்கு ஆளாக்கி வருகிறது.

விசாரணையின் பெயரில் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர்களை அடிக்கடி போலீஸ் ஸ்டேசனுக்கு அழைக்கிறது.

சட்டத்தில் நம்பிக்கையுள்ள பொறுப்புமிகுந்த குடிமகன் என்ற அடிப்படையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர்கள் போலீசாருடன் ஒத்துழைக்கின்றனர். ஸ்டேடிய குண்டுவெடிப்புச் சம்பவத்தில் பாப்புலர் ஃப்ரண்டிற்கு எள்ளளவேனும் தொடர்பில்லை என்பதை போலீஸ் புரிந்துள்ளது.

இதற்கு முன்பு நடந்த சிறியதோ அல்லது பெரிதோ எந்த குண்டுவெடிப்பிலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர்களுக்கு தொடர்புண்டு என்பதை நிரூபிக்க முடியுமா? என்று அப்துற்றஹ்மான் சவால் விட்டுக்கூறினார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "முஸ்லிம்களுக்கு தொந்தரவு கொடுப்பதை கர்நாடகா போலீஸ் நிறுத்த வேண்டும்- பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா"

கருத்துரையிடுக