18 மே, 2010

காசு போட்டால் தங்கம் கொடுக்கும் வெண்டிங் மெஷின்

உலகின் பல்வேறு பகுதிகளில் பல்லாயிரக்கணக்கில் காசு போட்டால் பல்வேறு பொருட்களை கொடுக்கும் வெண்டிங் மெஷிண்கள் இருக்கின்றன.

குடிதண்ணீர் முதல் சூடான காஃபி வரை ஏராளமான பொருட்கள் இந்த காசு போட்டால் பொருட்களை கொடுக்கும் இயந்திரங்கள் மூலம் பெறப்படுகின்றன.

ஆனால் 'காசு போட்டால் தங்கம் கொடுக்கும்' ஒரு இயந்திரம் உலகில் முதல் முறையாக செயற்படத் தொடங்கியுள்ளது.

அபுதாபியிலுள்ள ஒரு முன்னணி ஹோட்டலிலேயே இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

ஆடம்பரமும், அதிகமான தேவைகளும், செல்வச் செழிப்பும் இருக்கும் வளைகுடா நாடுகளில் இப்படியான ஒரு இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதில் ஆச்சரியம் இல்லை.

தானியங்கி பணம் அளிக்கும் இயந்திரங்களின் பாணியில் அபுதாபியின் எமிரேட்ஸ் பேலஸ் ஹோட்டலில் இருக்கும் இந்த 'காசு போட்டால் தங்கம் கொடுக்கும் இயந்திரம்' வடிவமைக்கப்பட்டு செயற்படுகிறது.

தங்கத்தின் விலையை தினசரி கவனித்து அதற்கு ஏற்ற வகையில் எவ்வளவு பணத்துக்கு எவ்வளவு தங்கம் என்கிற ரீதியில் கணக்கிட்டு இந்த இயந்திரம் செயற்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த இயந்திரத்தில் ஒன்று, ஐந்து, மற்றும் பத்து கிராம் தங்கக் காசுகளையும், பிஸ்கட்டுகளையும் அளிக்கிறது.

ஜெர்மன் நாட்டின் தொழில்வல்லுநரான தாமஸ் கீஸ்லர் அவர்களின் எண்ணத்தில் உதித்த இயந்திரம் இது.

இந்த இயந்திரத்தின் துவக்க விழாவும் சரியாக திட்டமிட்டே செயற்படுத்தப்பட்டுள்ளது.

புதன்கிழமையன்று தங்கத்தின் விலை இது வரை இல்லாத அளவுக்கு, ஒரு கிராம் 45 டாலர்கள் அளவுக்கு உயர்ந்தது.

இந்த இயந்திரத்தில் பணத்தைப் போட்டு தங்கத்தை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, அந்த நிமிடத்தில் உலக அளவில் தங்கம் என்ன விலைக்கு விற்கப்படுகிறதோ அந்த விலையும் கிடைக்கும் என்றும் கீஸ்லர் கூறுகிறார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "காசு போட்டால் தங்கம் கொடுக்கும் வெண்டிங் மெஷின்"

கருத்துரையிடுக