15 மே, 2010

"டாக்டருக்கு படித்து மக்களுக்கு சேவை செய்வேன்"- திருச்சி மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற ஷமீமா

திருச்சி மாவட்ட அளவில் சமயபுரம் எஸ்.ஆர்.வி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி எம்.ஷமீமா 1182 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

அவர் பெற்ற மதிப்பெண் விவரம் வருமாறு:-
தமிழ்- 192, ஆங்கிலம்- 191, இயற்பியல்- 191, வேதியியல்- 200 உயிரியில்- 200, கணிதம்- 200 மொத்தம் 1182 மதிப்பெண்

திருச்சி மாவட்டத்தில் முதல் இடம் பெற்ற ஷமீமாவின் தந்தை முகமது பாரூக் தஞ்சை மாவட்டம் ராஜகிரியை பண்டாரவாடையை சேர்ந்தவர் இவர் சார்ஜாவில் வேலை அக்கவுண்டட்டாக பார்த்து வருகிறார். தாய் லைலா ஜான். சகோதரி ஷாய்மா. இரட்டைக்குழந்தைகளான இருவரும் எஸ்.ஆர்.வி., பள்ளியில் படித்தனர். ஷாய்மா 1,169 மதிப்பெண் பெற்றுள்ளார்.

தற்போது கோடை விடுமுறைக் காக ஷமீமா சார்ஜா சென்றுள்ளார். சார்ஜாவில் இருக்கும் ஷமீமா, மொபைல்ஃபோன் மூலம் அளித்த பேட்டி:

"எங்களது சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் பண்டாரவாடை. நான் 8வது படிக்கும்போதே, மாநில அளவில் ப்ளஸ் 2 தேர்வில் முதலிடம் பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் படித்து வந்தேன். அதற்காக, கடந்த இரு ஆண்டாக குடும்பத்தை பிரித்து ஹாஸ்டலில் தங்கி படித்தேன்.

தினமும் 10 மணி நேரம் வரை படிப்பேன். பள்ளியில் வாரத்திற்கு 5 முறை டெஸ்ட் வைப்பார்கள். டெஸ்ட்டில் செய்யும் தவறை சுட்டிக்காட்டி, அதை திருத்துவார்கள். அவர்கள் வைத்த டெஸ்ட் எனக்கு பயனுள்ளதாக இருந்தது. எஸ்.எஸ்.எல்,ஸி.,க்கு பிறகு 'டிவி' பார்ப்பது இல்லை. எனக்கு கால்பந்துதான் பிடித்த விளையாட்டு. எனது வெற்றிக்கு பெற்றோர், பள்ளி முதல்வர், ஆசிரியர், பள்ளி நிர்வாகிகள்தான் காரணம்.

இருதய நோய்க்கான டாக்டர் ஆவதே எனது லட்சியம். உயிரை காக்கும் சிக்கலான மருத்துவம் என்பதால் அது எனக்கு பிடிக்கும். மருத்துவ படிப்பை தமிழகத்திலும், மேற்படிப்பை இங்கிலாந்திலும் படிக்க உள்ளேன்". இ௦வ்வாறு அவர் கூறினார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on ""டாக்டருக்கு படித்து மக்களுக்கு சேவை செய்வேன்"- திருச்சி மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற ஷமீமா"

கருத்துரையிடுக