அபுதாபி:எமிரேட்ஸ் இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் ஐக்கிய அரபு அமீரகத்தில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான சமூக நல அமைப்பாகும்.
இவ்வமைப்பு ஐக்கிய அரபு அமீரகத்தில் பல்வேறு சமூகப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் கடந்த 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் ஷேக் கலீஃபா மெடிக்கல் செண்டரில் உள்ள அபுதாபி இரத்த வங்கியில் வைத்து இரத்ததான முகாமை நடத்தியது. இம்முகாமை சமூக சேவகர் ஜனாப்.அல்தாஃப் மற்றும் ஜனாப் ஷேக் பாவா ஆகியோர் துவக்கி வைத்தனர். ஷேக் கலீஃபா மெடிக்கல் செண்டரின் மருத்துவர் அஹ்மத் மற்றும் மருத்துவர் மசூஸா ஆகியோரும் பங்கேற்றனர்.
EIFF சார்பாக 52 பேர் இரத்ததானம் செய்தனர். EIFFன் சகோதரர் அய்யூப் அக்னாடி அவர்கள் சிறப்பு விருந்தினர்களையும், இரத்ததானம் செய்த கொடையாளிகளையும் வரவேற்றார்.
EIFF இன் சகோதரர் அஷ்ரஃப் மச்சார் இரத்த தான முகாமின் முக்கியத்துவம் குறித்தும், EIFF கடந்த காலங்களில் ஆற்றிய பணிகளைக் குறித்தும் உரை நிகழ்த்தினார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஜனாப் ஷேக் பாவா EIFFன் சிறப்பான பணிகளை பாராட்டி உரையாற்றினார். SKMC இன் மருத்துவர் அஹ்மத் அவர்கள் குருதி கொடையாளிகளை ஊக்கமூட்டும் விதமாக சில ஆலோசனைகளை தனது உரையின் ஊடே வழங்கினார்.
மருத்துவர் மசூஸா இரத்த தான முகாமை ஏற்பாடுச் செய்த EIFFஐ பாராட்டினார். இறுதியாக EIFFன் சகோதரர் அஷ்ரஃப் மச்சார் நன்றி நவின்றார்.
0 கருத்துகள்: on "அபுதாபி:எமிரேட்ஸ் இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் நடத்திய இரத்ததான முகாம்"
கருத்துரையிடுக