மும்பை:புனேயில் ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பில் அப்துஸ்ஸமது பட்கலைப் பற்றி தவறான தகவலை மஹாராஷ்ட்ரா ஏ.டி.எஸ் மத்திய அரசுக்கு அளித்துள்ளதாக கருதப்படுகிறது.
2009 ஆம் ஆண்டு ஆயுதம் கைப்பற்றிய வழக்கில் மட்டுமே அப்துஸ்ஸமது பட்கலை போலீஸ் கஸ்டடியில் விசாரிக்க அனுமதிக்கோரி மஸ்காவ் மெட்ரோபோலிடன் நீதிமன்றத்தில் ஏ.டி.எஸ் நேற்று மனுத்தாக்கல் செய்திருந்தது.
வருகிற ஜூன் ஒன்றாம் தேதிவரை போலீஸ் கஸ்டடியில் அப்துஸ்ஸமது பட்கல் ரிமாண்ட் செய்யப்பட்டார். 17 பேர் கொல்லப்படுவதற்கு காரணமான ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளி அப்துஸ்ஸமது பட்கல் என நேற்று முன் தினம் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்திருந்தார்.
நூறு நாட்களுக்குள் முக்கிய குற்றவாளியை கண்டுபிடித்ததற்காக மஹாரஷ்ட்ரா மாநில ஏ.டி.எஸ்ஸையும், புனே போலீஸையும் ப.சிதம்பரம் பாராட்டியிருந்தார். அதேவேளையில், மங்களூரில் கைதுச்செய்யப்பட்ட அப்துஸ்ஸமது பட்கலிற்கு புனே குண்டுவெடிப்பில் தொடர்பில்லை என நேற்று முன்தினம் மஹாராஷ்ட்ரா மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஆனால் ஏ.டி.எஸ் தலைவர் ராகேஷ் மரியா இதுக்குறித்து கருத்துத் தெரிவிக்கவில்லை.பெங்களூர் குண்டுவெடிப்புடன் தொடர்புபடுத்தி 2008 ஆம் ஆண்டில் அப்துஸ்ஸமது பட்கல் கைது செய்யப்பட்டிருந்த போதிலும் போதிய ஆதாரமில்லாததால் நீதிமன்றம் அவரை விடுதலை செய்திருந்தது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "புனே குண்டுவெடிப்பு:மத்திய அரசிடம் தவறான தகவலை அளித்த ஏ.டி.எஸ்"
கருத்துரையிடுக