6 மே, 2010

இந்தோனேசியா நிதியமைச்சர் உலக வங்கியின் மேலாண்மை இயக்குநராக நியமனம்

ஜகார்தா:இந்தோனேசியாவின் நிதியமைச்சர் முல்யானி இந்த்ராவதி உலக வங்கியின் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த்ராவதி இந்தோனேசியாவில் கொண்டு வந்த மாற்றங்கள் வெற்றிகரமாக இருந்தது என அவருடைய ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்ட அதிபர் சுசீலோ பாங்பாங் யுதோயோனோ தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதில் இந்தோனேசியாவுக்கு மிகவும் பயன் தரத்தக்க வகையில் அமைந்தது இந்த்ராவதியின் மாற்றங்கள்.

ஆனால் 2008 வங்கிகளின் கடன்களை பொறுப்பேற்றதில் ஊழல் நடந்ததாக இந்த்ராவதிக்கெதிராக குற்றச்சாட்டும் உண்டு. ஊழலிலிருந்து மீண்டுவரும் நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் இவருடைய ராஜினாமா என வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இவருடைய நியமனத்தை உலக வங்கி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த்ராவதி இந்தோனேசியாவில் பிரசித்திப்பெற்ற நிதியமைச்சராக இருந்தார் என்றும் அங்கு சிறப்பானதொரு பொறுப்பை நிறைவேற்றினார் என்றும் உலக வங்கியின் தலைவர் ரோபர்ட் சோலிக் கருத்து தெரிவித்தார்.

லத்தீன் அமெரிக்கா, கரீபியன், மத்திய ஆசியா, வடகிழக்கு ஆப்ரிக்கா, பசிபிக் ஆகிய பிரதேசங்களின் பொறுப்பு இனி இந்த்ராவதியின் கீழ் வரும். ஜூன் ஒன்றாம் தேதி இந்த்ராவதி பொறுப்பேற்பார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இந்தோனேசியா நிதியமைச்சர் உலக வங்கியின் மேலாண்மை இயக்குநராக நியமனம்"

கருத்துரையிடுக