பெங்களூர்:நண்பனின் மனைவியை பாலியல் ரீதியாத தொந்தரவு செய்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து கர்நாடகா பா.ஜ.க அமைச்சர் ராஜினாமாச் செய்தார்.
கர்நாடகா மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க அரசின் சிவில் சப்ளைஸ் அமைச்சராக பதவி வகித்தவர் ஹரத்தாலு ஹாலப்பா. இவர் சமூக சேவகரான தனது நண்பனின் மனைவியை பாலியல் ரீதியாக தொந்தரவுச் செய்ததாக குற்றஞ்சாட்டி கன்னட மொழியில் வெளிவரும் பிரபல பத்திரிகையொன்று முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.
ஆனால் இந்தக் குற்றச்சாட்டை அமைச்சர் மறுத்தார். பஞ்சாயத்து தேர்தல் விரைவில் கர்நாடகாவில் நடைபெற இருப்பதால் அமைச்சர் மீதான புகார் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்திவிடும் எனக்கருதி ஹாலப்பா ராஜினாமா செய்துவிட்டார். இவருடைய ராஜினாமாவை முதல் அமைச்சர் எடியூரப்பா ஏற்றுக்கொண்டதாக பெல்காமில் தெரிவித்தார்.
நான்கு மாதம் முன்பு இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இரவு உணவை முடித்துக் கொண்டு இரவில் தங்குவதற்கு நண்பனின் வீட்டிற்கு சென்றுள்ளார் ஹாலப்பா. நடுஇரவில் தனக்கு இரத்த அழுத்தம் குறைந்திருப்பதாக கூறி தனது பாதுகாப்பு அதிகாரியிடம் சென்று மாத்திரை வாங்கி வருமாறு நண்பனிடம் கூறியுள்ளார். மாத்திரையை வாங்கிக் கொண்டு நண்பன் திரும்பி வந்தபொழுது மனைவி தேம்பி அழுதவாறு நின்றதை பார்த்துள்ளார்.
தன்னை அமைச்சர் ஹாலப்பா பாலியல் ரீதியாக தொந்தரவுச் செய்ததை அப்பெண்மணி கணவனிடம் தெரிவித்துள்ளார். கன்னட பத்திரிகை வெளியிட்ட செய்தியில் நேரடியாக அமைச்சரின் பெயர் குறிப்பிடாவிட்டாலும், மறைமுகமாக அமைச்சர் ஹாலப்பாவை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
ஹாலப்பாவிற்கெதிராக கிரிமினல் வழக்கு பதிவுச்செய்து விசாரிக்க வேண்டுமென்று கர்நாடகா பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர்.வி.தேஷ்பாண்டே கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "பாலியல் தொந்தரவு:கர்நாடகா பா.ஜ.க அமைச்சர் ராஜினாமா"
கருத்துரையிடுக