காபூல்:ஆஃப்கானில் உள்ள மிகப்பெரிய நேட்டோ இராணுவ தளத்தை தலிபான்கள் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
தெற்கு ஆப்கானிஸ்தானில் கந்தஹார் விமானப் படை தளத்தில் உள்ள இந்த தளம்தான் ஆப்கானிஸ்தானிலேயே மிகப் பெரிய நேட்டோ ராணுவத் தளமாகும். ராக்கெட்கள், மார்ட்டர்கள், தானியங்கி துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றைக் கொண்டு தலிபான்கள் தாக்குதல் நடத்தினர்.
கடந்த ஒரு வாரத்தில் நடந்துள்ள 2வது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதலில் பல படையினர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் உயிரிழப்பு குறித்து தகவல் இல்லை.
இந்த தாக்குதல் பல மணி நேரம் நீடித்ததாக கனடா நாட்டு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு தலிபான்கள் பொறுப்பேற்றுள்ளனர். இதுகுறித்து தலிபான் செய்தித் தொடர்பாளர் குவாரி யூசுப் அகமதி அசோசியேட் பிரஸ்ஸுக்கு அளித்த பேட்டியில், 'எங்களது வீரர்கள், இரு முனைகளிலிருந்து 15க்கும் மேற்பட்ட ராக்கெட்களை வீசித் தாக்குதல் நடத்தினர்' என்றார்.

0 கருத்துகள்: on "ஆஃப்கானில் மிகப்பெரிய நேட்டோ இராணுவத் தளத்தை தாக்கிய தலிபான்கள்"
கருத்துரையிடுக