4 மே, 2010

நதிநீர் பிரச்னை:​இந்தியாவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம்​ செல்கிறது பாகிஸ்தான்

சிந்து நதி நீர் உடன்படிக்கைக்கு மாறாக இந்தியா செயல்படுவதாகவும் இந்த பிரச்னையில் சமரசம் செய்துவைக்கக் கோரியும் சர்வதேச நீதிமன்றத்தை அணுகுகிறது பாகிஸ்தான்.​

இந்த உடன்படிக்கையை மீறி இந்தியா கிஷண்கங்கா நீர்மின்திட்டத்தை அமைத்து வருவதாக பாகிஸ்தான் புகார் கூறியுள்ளது.​ இந்த விவகாரத்துக்காக சட்டவல்லுநர்கள் குழுவையும் அது அமைத்துள்ளது.​ இந்த குழுவுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த சர்வதேச சட்ட வல்லுநரான பேராசிரியர் கேயான் ஹோமி கைகோபாத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

​ சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதால் ஆகக்கூடிய செலவுக்கென பாகிஸ்தான் 1 கோடி டாலர் ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

​ கிஷண்கங்கா திட்டத்தை இந்தியா நிறைவேற்றினால் ஜீலம் நதிக்கு நீர் வரத்து இருக்காது என்று ஆட்சேபிக்கிறது பாகிஸ்தான்.​ இந்த விவகாரத்தில் இதுவரை நடந்த இரு தரப்பு பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.
dinamani

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "நதிநீர் பிரச்னை:​இந்தியாவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம்​ செல்கிறது பாகிஸ்தான்"

கருத்துரையிடுக