6 ஜூன், 2010

பிரிட்டன்:பர்மிங்காமில் முஸ்லிம்களை கண்காணிக்க 150 கேமராக்கள்

லண்டன்:பிரிட்டனிலுள்ள பர்மிங்காம் நகரில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் இரண்டு பகுதிகளில் தீவிரவாத எதிர்ப்பு படை போலீசார் ஏராளமான கேமராக்களை நிறுவியுள்ளனர்.

இப்பகுதிகளில் வருகின்றவர்கள் இங்கிருந்து செல்கின்றவர்கள் ஆகியோரைக் கண்காணிப்பதற்காக இக்கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன.

சமூக விரோதிகள், போதைப்பொருள் வியாபாரிகள், வாகன திருடர்கள் ஆகியோரை கண்காணிக்கத்தான் இந்த கேமராக்களை நிறுவுகிறோம் என்று பொய்க்கூறியுள்ளனர் போலீசார். ஆனால் தீவிராவாதத்திற்கெதிரான அரசு நிதியிலிருந்துதான் 30 லட்சம் பவுண்ட் இதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளது என்ற செய்தி தற்பொழுது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளை அடையாளம் காணும் எ.என்.பி.ஆர் என்ற 150 ஆட்டோமெட்டிக் கேமராக்கள் வாஷ்வுட்ஹீத், ஸ்பார்க் ப்ரூக் ஆகிய இடங்களில் நிறுவப்பட்டுள்ளது.

நகர முழுவதும் நிர்மாணிக்கப்பட்ட கேமராக்களைவிட முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் இவ்விரு இடங்களில் நிர்மாணிக்கப்பட்டது மூன்று மடங்கு அதிகமாகும். இதில் 40 கேமராக்கள் எவருடைய கண்ணில் காணாத அளவுக்கு ரகசிய கேமராக்களாகும்.

கேமராக்களை நிறுவதுத் தொடர்பாக தங்களுக்கு தவறான தகவலை தந்ததாக கவுன்சிலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

கேமராவுக்கான நிதியை உள்துறை அமைச்சகம்தான் தந்தது என்பதை அறிந்தபொழுது இது உளவுப்பணிக்காகவா என்பது குறித்து விசாரித்ததாக ரெஸ்பெக்ட் கட்சியின் உறுப்பினரும், கவுன்சிலருமான சல்மா அய்யூப் கூறுகிறார்.

வழிப்பறிக்கொள்ளை போன்ற குற்றங்களைத் தடுக்கத்தான் இத்தகைய கேமராக்களை நிர்மாணித்திருப்பதாக அதிகாரிகள் இதுக்குறித்து பதிலளித்ததாக அவர் கூறுகிறார்.

டி.எ.எம் நிதி தீவிரவாதத்தை தடுக்க மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்ற நிபந்தனை உண்டு. ஒரு சமுதாயத்தை முழுவதுமாக சந்தேகத்தின் நிழலில் கொண்டுவந்து கண்காணிக்கும் இத்தகையதொரு திட்டம் முதல் தடவையாகும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொதுமக்களின் அந்தரங்க விஷயங்களை தடைச்செய்யும் இத்தகைய கேமராக்களுக்கு தடைவிதிக்க வேண்டும் எனக்கோரி சமூக சேவகரான ஸ்டீவ் ஜோளியின் தலைமையில் பிரச்சாரம் துவக்கப்பட்டுள்ளது.

அந்தரங்க விஷயங்களின் மீதான வரம்புமீறலை தடுப்போம் என்ற அறிவித்த துணை பிரதமர் நிக் க்ளக் இதில் தலையிடவேண்டும் என ஸ்டீவ் ஜோளி வலியுறுத்தியுள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பிரிட்டன்:பர்மிங்காமில் முஸ்லிம்களை கண்காணிக்க 150 கேமராக்கள்"

கருத்துரையிடுக