இந்த மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது: பொருளாதார மந்தநிலையில் இருந்து உலக நாடுகள் மீண்டு வருவது என்பது, எளிதில் நடந்து விடக்கூடிய ஒன்றல்ல. அதனால், பொருளாதார மந்த நிலையில் இருந்து மீள, உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.
தொழில்மயமான நாடுகள் புதுவிதமான தற்காப்புக் கொள்கைகளை அறிவித்துள்ளதும், வர்த்தகத்திற்கு தற்போதுள்ள தடையும் வளரும் நாடுகளை பாதிப்பதாக உள்ளன.சந்தை நிலவரங்கள் எளிதில் மாறி விடக்கூடிய தற்போதைய சூழ்நிலையில், உலகளாவிய வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.
தொழில் ரீதியாக வளர்ந்த நாடுகள் ஒரே நேரத்தில் சிக்கன நடவடிக்கைகளை கையாண்டால், அரசு செலவுகளை ஒரே நேரத்தில் திடீரென குறைத்தால், பொருளாதார மந்த நிலைமை இரு மடங்காக அதிகரித்து விடும்.
மேலும்,பொதுக்கடன்களை கையாள்வதில் மிக நுணுக்கமான அணுகுமுறைகளைப் பின்பற்ற வேண்டும். பணவீக்கத்தை விட அதைக் குறைப்பதே நமக்கு பெரும் சவாலாக உள்ளது. எனவே, பொதுக் கடன் பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பதோடு, பொருளாதார மந்தநிலையில் இருந்து மீள்வதற்கும் அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும். இதற்கு ஜி-20 நாடுகள், ஒருங்கிணைந்த கொள்கைகளை கவனமுடன் கடைபிடிக்க வேண்டும்.இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
0 கருத்துகள்: on "'அரசு செலவுகளை திடீரென குறைக்காதீர்கள்'- ஜி 20 நாடுகளின் மாநாட்டில் மன்மோகன் எச்சரிக்கை"
கருத்துரையிடுக