7 ஜூன், 2010

26 ஆண்டுகளுக்குப் பின் போபால் விஷ வாயு வழக்கில் இன்று தீர்ப்பு

போபால்:போபால் விஷ வாயு கசிவு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.

மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் யூனியன் கார்பைடு என்ற நிறுவனத்தில் இருந்து 1984 டிசம்பர் 2-ம் தேதி நள்ளிரவுக்கு மேல் விஷ வாயு கசிந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் நிரந்தரமாக பாதிக்கப்பட்டனர்.

இதுத் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் 9.பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.இவர்களில் யூனியன் கார்பைடு நிறுவன துணை மேலாளர் ராய் செளத்ரி என்பவர் இறந்து விட்டார்.

அரசு சாட்சிகள் 178 பேரிடமும்,எதிர்த்தரப்பு சாட்சிகள் 8 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. 3008 ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

26 ஆண்டுகளுக்குப் பின் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது. இதனால், போபால் மாவட்ட நீதிமன்றத்தைச் சுற்றி 1 கி.மீ. தூரத்துக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கு தொடர்புடையவர்களைத் தவிர மற்றவர்கள் நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என கூடுதல் மாவட்ட ஆட்சியர் ரஜ்னீஷ் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "26 ஆண்டுகளுக்குப் பின் போபால் விஷ வாயு வழக்கில் இன்று தீர்ப்பு"

கருத்துரையிடுக